Home
Mobile

Tim Cook கொடுத்த டிவிஸ்டு.. Single Camera, Slim டிசைனில் புது iPhone மாடல்.. விலையை சொன்னா நம்புவீங்களா?

இந்த வார தொடக்கத்தில், ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் 17 சீரீஸில் (iPhone 17 Series) இடம்பெறும் மாடல்களில் முக்கியமான மாற்றம் ஒன்று நிகழும் என்கிற தகவல் வெளியானது. அந்த தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரிஸின் கீழ் பிளஸ் மாடலை அறிமுகம் செய்யாமல் தவிர்க்க உள்ளது. ஐபோன் 17 பிளஸ் (iPhone 17 Plus) மாடலுக்கு பதிலாக ஐபோன் 17 ஸ்லிம் (iPhone 17 Slim) என்கிற புதிய மாடல் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

இது ஐபோன் 17 சீரீஸில் வெளியாகும் அனைத்து மாடல்களிலும் மிகவும் மெலிதான வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிக்கை, ஐபோன் 17 ஸ்லிம் மாடலின் சாத்தியமான அம்சங்களை அடிகோடிட்டு காட்டியிருந்தாலும், கேமரா செட்டப்பை பற்றிய விவரங்களை தவற விட்டுவிட்டது. இப்போது, ​​புகழ்பெற்ற ஆப்பிள் ஆய்வாளர் ஆன மிங்-சி குவோ இது குறித்த விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

Single Camera, Slim டிசைனில் புது iPhone மாடல்!

ஆய்வாளர் குவோவின் கூற்றுப்படி, ஐபோன் 17 ஸ்லிம் மாடலில் சிங்கிள் ரியர் கேமரா (Single Rear Camera) மட்டுமே இடம்பெறும். இது உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் ஐபோன் 8 (Apple iPhone 8) மாடலுக்கு பிறகு மெயின்லைன் சீரிஸில் (Mainline Series) முதல் சிங்கிள் ரியர் கேமரா மாடலாக - ஐபோன் 17 ஸ்லிம் இருக்கும்.

வன்பொருள் தொடர்பான அம்சங்களை வைத்து போட்டியிடுவதற்கு பதிலாக, ஐபோன் 17 ஸ்லிம் உடன் ஆப்பிள் நிறுவனமானது "புதுமையான வடிவமைப்பை வலியுறுத்தும்" என்று குவோ கூறுகிறார். அதாவது ஸ்டாண்டர்ட் (ஐபோன் 17) மற்றும் ப்ரோ மாடல்களுடன் ()ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்) ஒப்பிடுகையில், அழகியல் மற்றும் பெயர்வுத்திறன் ஆகியவற்றில் ஐபோன் 17 ஸ்லிம் கவனம் செலுத்தும்.

ஐபோன் 17 ஸ்லிம் மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதுவரை வெளியான லீக்ஸ் தகவல்களின்படி, ஐபோன் 17 ஸ்லிம் மாடல் ஆனது 1260 × 2740 ரெசல்யூஷன் கொண்ட 6.6 இன்ச் டிஸ்பிளேவை (6.6 inch Display) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை, இது ஏ19 சிப்செட்டை பேக் செய்யும். இது ப்ரோ மாடல்களில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஏ19 ப்ரோ சிப்செட்டை விட ஒரு படி கீழே இருக்கும். ஐபோன் 17 ஸ்லிம் மாடலில் நாட்ச் டிசைன் இடம்பெறாது; மாறாக தற்போதைய ஐபோன்களில் இடம்பெறும் டைனமிக் ஐலேண்ட் வடிவமைப்பையே கொண்டு வரலாம்.

ஐபோன் 17 ஸ்லிம் ஆனது அலுமினியம் ஃபிரேமை கொண்டிருக்கும் என்று முந்தைய அறிக்கைகள் பரிந்துரைத்தாலும், குவோவின் கூற்றுப்படி இது டைட்டானியம் ஃபிரேமை பயன்படுத்தும். அதாவது ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களிலும் டைட்டானியம் ஃபிரேம் இருக்கும். ஆனால் அவைகளில் இருப்பதை விட குறைந்த அளவிலான டைட்டானியம் இதில் பயன்படுத்தப்படலாம் என்று குவோ கூறுகிறார்.

மோடம் தொடர்பாகவும் சில வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகிறது. ஐபோன் 17 ஸ்லிம் மாடலில் குவால்காம் மோடம்கள் பயன்படுத்தப்படலாம் என்று வதந்தி பரவுகிறது, ஆனால்இது ஆப்பிளின் சொந்த 5ஜி சிப்பை கொண்டிருக்கும் என்று குவோ பரிந்துரைக்கிறார். இதேதான் மற்ற ஐபோன் 17 மாடல்களை போலவே ஸ்லிம் மாடலிலும் ஆப்பிளின் சொந்த சிப்செட் இடம்பெறும் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை.

மிகவும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து தான் இந்த விவரங்களை நாம் பெறுகிறோம் என்றாலும் கூட, அவைகளை கவனமாக நம்புவது அவசியம். ஏனெனில் ஐபோன் 17 சீரிஸின் வெளியீடு வெகு தொலைவில் உள்ளது. எனவே ஐபோன் 17 ஸ்லிம் மாடலில் என்ன வகையான மாற்றங்கள் வேண்டுமானாலும் ஏற்படலாம்.

ஐபோன் 17 ஸ்லிம் என்ன விலைக்கு வரும்? ஆப்பிள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மாடல் ஆன ஐபோன் 17 ஸ்லிம் ஆனது இந்திய சந்தையில் ரூ.89,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் விலை தான் என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
All New Apple iPhone 17 Slim With Single Rear Camera Titanium Frame What We Know So Far
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X