Home
Mobile

16GB உடன் வரும் Samsung போன்கள்.. iPhone-களில் இருப்பதை விட டபுள்.. Apple க்கு செக் வைத்த சாம்சங்!

ஆப்பிளின் (Apple) ஒட்டுமொத்த ஐபோன்களுக்கும் வேட்டு வைக்க வேண்டும் என்று சாம்சங் (Samsung) நிறுவனம் முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது. சாம்சங் நிறுவனம் அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆன கேலக்ஸி எஸ்26 சீரிஸில் (Galaxy S26 Series) "செயல்திறன்" அடிப்படையில் ஒரு பெரிய மாற்றத்தைகொண்டுவரும் என்பது போல் தெரிகிறது

ஒரு புதிய லீக்கின் படி, சாம்சங் நிறுவனம் அதன் முழு எஸ்26 சீரிஸிலும் 16ஜிபி ரேம்-ஐ சேர்க்கலாம். இது உண்மையாக இருந்தால், இன்றைய ஆப்பிள் ஐபோன்களில் காணப்படும் ஸ்டோரேஜை விட இது இரட்டிப்பாகும்; மேலும் இது கேலக்ஸி எஸ்26 சீரிஸில் - ஏஐ (AI) மற்றும் மல்டி டாஸ்கிங் விஷயங்களில் தீவிரமான உந்துதலையும் கொடுக்கும்.

16GB உடன் வரும் Samsung போன்கள்.. iPhone-களில் இருப்பதை விட டபுள்!

மேக்வாரி ரிசர்ச் (Macquarie Research) உடன் இணைத்து டிப்ஸ்டர் @Jukanlosreve வழியாக எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள தகவலின்படி, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் னைத்து கேலக்ஸி எஸ்26 சீரிஸ் வேரியண்ட்களிலும் தரப்படுத்தப்பட்ட 16ஜிபி ரேம் இடம்பெறும்.

நினைவூட்டும் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிய சந்தைகளில் (தென் கொரியா மற்றும் சீனா) அறிமுகமாகும் அல்ட்ரா மாடல் மட்டுமே 16ஜிபி ரேம் உடன் வருகிறது, மீதமுள்ள மாடல்கள் 12ஜிபி உடன் தான் வருகின்றன. ஆகையால் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் உடன்ஒப்பிடும் போது சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் மாடல்கள் ஆனது பெரிய அப்கிரேட்-ஐ பெறவுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை, அதன் முழு ஐபோன் 16 சீரீஸுமே 8ஜிபி மெமரி உடன் வருகின்றன. இருப்பினும் வரவிற்கும் ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய மாடல்களில் 12ஜிபி மெமரி இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பேஸிக் ஐபோன் 17 மாடலானது 8ஜிபி மெமரியை தான் பெரும்பாலும் தக்கவைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் ஒருபக்கம் சாம்சங் நிறுவனம் வருகிற ஜூலை 9 ஆம் தேதியன்று அதன் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வை நடத்தவுள்ளது. இந்த நிகழ்வு ஜூலை 9 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். இது சாம்சங்கின் யூட்யூப் சேனல், சாம்சங்.காம் (Samsung.com) மற்றும் சாம்சங் நியூஸ்ரூம் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இந்த நிகழ்வில் சாம்சங்கின் புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் சாஃப்ட்வேர் மேம்படுத்தல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் இந்த உலகளாவிய வெளியீட்டு நிகழ்விற்கு முன்னதாக, சாம்சங் இந்தியா அதன் வரவிருக்கும் கேலக்ஸி சீரிஸ்-க்கான முன்பதிவுகளை திறந்துள்ளது.

16GB உடன் வரும் Samsung போன்கள்.. iPhone-களில் இருப்பதை விட டபுள்!

இதன் கீழ் எர்லி பையர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் (அதாவது ஜூன் 24 ஆம் தேதி முதல்) அமலில் உள்ளது. இதன்கீழ் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் திரும்பப்பெறக்கூடிய ரூ.1,999 செலுத்துவதன் மூலம் வரவிருக்கும் கேலக்ஸி தயாரிப்புகளை முன்பதிவு செய்யலாம்.

இந்த முன்கூட்டிய அணுகல் பாஸ் (Early access pass) வழியாக வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,999 வரை மதிப்புள்ள நன்மைகள் கிடைக்கும். இதில் முன்கூட்டிய டெலிவரி, பிரத்தியேக வண்ணங்களுக்கான அணுகல் மற்றும் சிறந்த மாற்று விகிதங்கள் ஆகியவைகளும் அடங்கும். ஆர்வமுள்ளவர்கள் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், அமேசான் இந்தியா, பிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டரீடெயில் ஸ்டோர்கள் வழியாக முன்பதிவுகளை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு முன்பாகவே சாம்சங் அதன் பட்ஜெட் விலை இயர்பட்ஸ் பிரிவின் கீழ் கேலக்ஸி பட்ஸ் கோரை (Samsung Galaxy Buds Core) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது ஒயிட் மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன்களில் ரூ.4999 க்கு அமேசான் இந்தியா (Amazon.in) மற்றும் சாம்சங் வலைத்தளம் (Samsung.com) ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளின் வழியாக வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
All Models in Samsung Galaxy S26 Series Will Pack 16GB RAM twice As current iPhones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X