Home
Mobile

வட போச்சே.. அவசரப்பட்டு iPhone 17 வாங்குனவங்க பாவம்.. 24MP செல்பீ கேமராவுடன் 5 புதிய iPhone மாடல்கள்!

மேக்ரூமர்ஸின் சமீபத்திய அறிக்கையின்படி, ஜேபி மோர்கனின் புதிய ஈக்விட்டி ஆராய்ச்சி குறிப்பின் (JP Morgan new equity research note) படி, ஆப்பிளின் அடுத்த தலைமுறை ஐபோன் 18 சீரீஸில் (iPhone 18 Series) குறிப்பிடத்தக்க செல்பீ கேமரா அப்கிரேட்-ஐ (Selfie Camera Upgrade) இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது - ஐபோன் 18 சீரிஸில் உள்ள அனைத்து பிளாக்ஷிப் மாடல்களிலும் 24 மெகாபிக்சல் செல்பீ கேமராவை (24MP Selfie Camera) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய ஐபோன் 17 சீரிஸில் (iPhone 17 Series) உள்ள 18 மெகாபிக்சல்களில் இருந்து அதிகமாகும்.

24MP செல்பீ கேமராவுடன் 5 புதிய iPhone மாடல்கள்!

இந்த மாற்றம் ஆப்பிளின் செல்பீ கேமரா தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கலாம். மேலும் இந்த மாற்றம் இன்னும் கூர்மையான படங்கள், மேம்படுத்தப்பட்ட குறைந்த-ஒளி செயல்திறன் மற்றும் விரிவான போர்ட்ரெயிட் காட்சிகளை உறுதியளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த தகவல் துல்லியமாக இருந்தால், குறிப்பிட்ட செல்பீ கேமரா அப்கிரேட் ஆனது ஐபோன் 18 ( iPhone 18), ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro), ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ( iPhone 18 Pro Max), ஐபோன் ஏர் 2 (iPhone Air 2) மற்றும் ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் (Apple first foldable iPhone) ஆகிய அனைத்து மாடல்களிலும் இடம்பெறலாம்.

நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 17 சீரீஸ் மடல்களில் தான் ஆப்பிளின் "சென்டர் ஸ்டேஜ்" செல்பீ கேமரா அறிமுகமானது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் சதுர வடிவ சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த வடிவமைப்பு பரந்த பார்வையை வழங்குகிறது, பயனர்கள் போர்ட்ரெய்ட் அல்லது லேண்ட்ஸ்கேப் மோட்-ல் படமெடுத்தாலும் கூடுதல் விவரங்களை பிடிக்க உதவுகிறது.

24எம்பி செல்பீ கேமராவானது எந்த அளவிற்கு உறுதியாக ஐபோன் 18 சீரிஸில் இடம்பெறும் என்று கூற முடியாது. ஏனென்றால் ஆரம்பகால வதந்திகள் ஐபோன் 17 சீரிஸில் 24 மெகாபிக்சல் செல்பீ கேமராவை பரிந்துரைந்தன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஐபோன் 17 சீரீஸில் 18 மெகாபிக்சல் செல்பீ கேமராவே ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றமாக இருந்தது.

ஒருவேளை அடுத்த ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் 24 மெகாபிக்சல் சென்சாரை ஏற்றுக்கொண்டால், அது சமீபத்திய ஐபோன் வரலாற்றில் செல்பீ கேமரா தெளிவுத்திறனில் மிகப்பெரிய முன்னேற்றங்களில் ஒன்றாக இருக்கும். ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் மாடலிலும் 24எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம் என்று கூறப்படுவதால், இது பெரும்பாலும் சாத்தியமாகேவ வாய்ப்புள்ளது

ஐபோன் 17 மாடலின் கேமரா அம்சங்கள் மற்றும் இதர அம்சங்கள்:
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.6 அபெர்க்ஷர் மற்றும் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா; சென்சாரால் 52மிமீ குவிய நீளம் கொண்ட 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமராவாகவும் செயல்பட முடியும்.
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் மேக்ரோ திறன்களை கொண்ட 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமரா
- 18எம்பி சென்டர் ஸ்டேஜ் செல்பீ கேமரா

- 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 6.3-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்பிளே
- புதிய ப்ரோமோஷன் (ProMotion) பேனல்
- 3000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- மேம்படுத்தப்பட்ட செராமிக் ஷீல்ட் 2 [ப்ரொடெக்ஷன்
- ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- ஆப்பிள் ஏ19 சிப்செட்
- பேஸிக் ஸ்டோரேஜ் 256ஜிபி
- 10 நிமிட சார்ஜ் எட்டு மணிநேர பயன்பாட்டை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
All Apple iPhone 18 Series Models Including iPhone Air 2 to pack 24MP Selfie Camera Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X