ரேம் என்றால் என்ன? என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமா?

By Siva
|

ஒரு கம்ப்யூட்டரோ, லேப்டப்போ, மொபைல் போனோ வாங்க வேண்டும் என்றால் முதலில் அனைவரும் கவனிப்பது அதில் எத்தனை ரேம் இருக்கும் என்பதுதான். ஏனெனில் ரேமை பொறுத்துதான் அந்த உபகரணத்தின் வேகம் இருக்கும். எனவே ரேண்டம் அக்சஸ் மெமரி என்று கூறப்படும் ரேம் மிக முக்கியமானது

ரேம் என்றால் என்ன? என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமா?

கம்ப்யூட்டர் மிக வேகமாக செயல்படுவதற்கு ரேம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் அதுமட்டுமே முழுமையான காரணம் இல்லை. இத்தகைய ரேம் குறித்து தற்போது விரிவாக பார்ப்போம்

ரேம் என்றால் என்ன?

ரேம் என்றால் என்ன?

ரேம் என்பது நிரந்தர நினைவாக வகையை சார்ந்தது அல்ல, இது ஒரு தற்காலிக மெமரி. இந்த ரேம் டேட்டாகளை சேமித்து பின்னர் பிராஸசருக்கு அனுப்புகிறது. நாம் கம்ப்யூட்டரை அணைக்கும் பொழுது இதில் உள்ள மெமரியும் அழிந்துவிடும்

எத்தனை வகை ரேம்கள் உள்ளன?

எத்தனை வகை ரேம்கள் உள்ளன?

பொதுவாக ரேம் இரண்டு வகைப்படும். ஒன்று DIMM என்று கூறப்படுகிறது. Dual In-Line Memory Module என்று கூறப்படும் இந்த DIMM ரேம் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களில் காணப்படும். இன்னொரு வகை ரேம் So-DIMM என்று கூறப்படும் Small Outline DIMM என்பது.

இவை சிறிய வகை கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்புகளில் காணப்படும். அளவில் பெரியது, சிறியது என இருந்தாலும் இரண்டும் செயல்படும் டெக்னாலஜி வகையில் ஒன்றுதான்.

DDR என்றால் என்ன?

DDR என்றால் என்ன?

தற்போது நாம் வாங்கும் பொருட்களில் DDR3 ரேம் என்று குறிப்பிட்டுள்ளதை பார்த்திருப்போம். இந்த DDR என்றால் என்ன? Double Data Rate என்பதின் சுருக்கமே DDR. இரண்டு மெமரி பரிமாற்றங்கள் நடப்பதால் இதற்கு இந்த பெயர் வந்தது. இந்த DDR ரேம் தற்போது DDR, DDR2, DDR3 உள்பட பல விதங்களில் கிடைக்கின்றது.

இவற்றில் DDR2 என்ற வகை மிகவும் பழையதாகிவிட்டது. எனவே இந்த வகை ரேம் வைத்டிருப்பவர்கள் அதிக வேகம் பெற தற்போதைய அப்டேட் ரேம் வாங்கிக் கொள்வது நலம்

பிரபல 'லோகோ'க்களுக்குள் ஒளிந்திருக்கும் 'மறைபொருள்' ரகசியங்கள்..!பிரபல 'லோகோ'க்களுக்குள் ஒளிந்திருக்கும் 'மறைபொருள்' ரகசியங்கள்..!

கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட DDR3 வகை ரேம்கள் தான் தற்போது பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. DDR2 ரேமில் உள்ள அதே பின்கள்தான் DDR3 வகை ரேம்களிலும் உள்ளது என்றாலும் குறைவான வோல்டேஜ்களிலும் செயல்படும் வகையை சேர்ந்தது.

தற்போது DDR4 வகை ரேம்கள் அறிமுகமாகியுள்ளது. 1.5V இல் இருந்து 1.2V வரையிலும் செயல்படும் இந்த் வகை ரேம்களில் 260 பின்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

ரேம்களில் இரண்டு வித நம்பர்கள் குறிப்பிட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். DDR3-1600 மற்றும் PC3-12800 என்பதுதான் அவை. DDR க்கு பின்னால் குறிப்பிட்டிருக்கும் எண் ஒரு நொடிக்கு எத்தனை மெகா டிரான்ஸ்பர் ஆகிறது என்பதை குறிக்கும். குறிப்பாக DDR3-1600 என்றால் ஒரு நொடிக்கு 1600MT டிரான்ஸ்பர் ஆகிறது என்பது பொருள்.

அதேபோல் PC க்கு பின்னால் குறிப்பிடப்பட்டிருக்கும் எண் ஒரு நொடிக்கு செயல்படும் மெகாபைட்டை குறிக்கின்றது. குறிப்பாக PC3-12800 என்று குறிப்பிட்டிருந்தால் நொடிக்கு 12800 MB செயல்படுகிறது என்பது பொருள்.

Best Mobiles in India

Read more about:
English summary
These days, RAM a.k.a Random Access Memory is the most important factor that one sees before buying a smartphone or a laptop or a computer.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X