ரூ.10,000 டிஸ்கவுண்ட்.. ஏகபோக ஆர்டர்களில் சிக்கி தவிக்கும் 200MP Samsung போன்.. என்ன மாடல்? நம்பி வாங்கலாமா?
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Galaxy S24 Series) ஸ்மார்ட்போன்களை ஜனவரி 17 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யவுள்ள நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸின் கீழ் அறிமுகமான 3 மாடல்களின் மீதுமே ரூ.10,000 வரையிலான டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்23, சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? இன்னும் சில தினங்களில் புதிய எஸ்24 சீரிஸின் கீழ் 3 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ள நிலையில், பழைய எஸ்23 மாடல்களை நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ்23 மீதான டிஸ்கவுண்ட்: தற்போது பிளிப்கார்ட்டில் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 ரூ.64,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.69,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் மேற்கண்ட ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.74,999 க்கும், ரூ.79,999 க்கும் அறிமுகமானது.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ் மீதான டிஸ்கவுண்ட்: தற்போது பிளிப்கார்ட்டில் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ் ரூ.84,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இது ரூ.94,999 க்கும் அறிமுகமானது. இதே ஸ்மார்ட்போனின் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது ரூ.94,999 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா மீதான டிஸ்கவுண்ட்: தற்போது அமேசானில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ரூ.97,249 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம், கடந்த ஆண்டு இது ரூ.1,24,999 என்கிற தொடக்க விலையில் அறிமுகமானது. எச்டிஎப்சி பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் கூடுதலாக 10% தள்ளுபடி கிடைக்கும்.
ஆனால், இங்குள்ள கேள்வி என்னவென்றால்.. ஜனவரி 17 ஆம் தேதியன்று அறிமுகமாகும் புதிய கேலக்ஸி எஸ்24 சீரீஸ்க்காக நீங்கள் காத்திருக்க வேண்டுமா அல்லது ஓராண்டு பழைய கேலக்ஸி எஸ்23 சீரீஸ் மாடல்களில் ஒன்றை தள்ளுபடி விலையில் (Offer Price) வாங்க வேண்டுமா?
இந்த கேள்விக்கான பதில் - முழுக்க முழுக்க நுகர்வோரின் தேவைகளை பொறுத்தது! குறிப்பிட்ட அளவிலான பட்ஜெட்டை கொண்டவர்கள் மற்றும் நல்ல கேமரா உட்பட பிற அம்சங்களுடன் கூடிய வேகமான பெர்ஃபார்மென்ஸை தேடுபவர்கள்.. கண்களை மூடிக்கொண்டு கடந்த ஆண்டு அறிமுகமான எஸ்23 அல்லது எஸ்23 பிளஸ் மாடல்களில், ஏதேனும் ஒன்றை வாங்கலாம்.
முடிந்தவரை எஸ்23 பிளஸ் வேரியண்டை வாங்கும்படி பரிந்துரைக்கிறோம். ஏனெனில் இது எஸ்23 மாடலை விட வேகமான சார்ஜிங் ஸ்பீட், பெரிய பேட்டரி மற்றும் பெரிய டிஸ்பிளே ஆகியவற்றை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் நீண்ட பேட்டரி லைஃப், வேகமான சார்ஜிங் சப்போர்ட், பெரிய டிஸ்பிளே, தரமான கேமரா செட்டப்பை விரும்பும் எவரையுமே ஏமாற்றம் அடைய செய்யாது.
ஒருவேளை உங்களுக்கு பட்ஜெட் ஒரு பிரச்சினை இல்லை என்றால், கேலக்ஸி எஸ்24 சீரிஸ் மாடலுக்காக காத்திருக்கவும். ஏனென்றால் 2024 எஸ் சீரீஸ் மாடல்கள் சில அட்டகாசமான அப்கிரேட்களை பெறும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸில் சாட்டிலைட் டெக்ஸ்ட்டிங் அம்சம் (Satellite texting feature) கொண்டு வரப்படலாம். இது செயற்கைக்கோள் இணைப்பு வழியாக அவசர குறுஞ்செய்தியை அனுப்ப உதவும் ஒரு அம்சமாகும்.
கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8-இன்ச் QHD+ டைனமிக் AMOLED LTPO டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். ஃபிரேம் டிபார்ட்மெண்டில் ஒரு புதிரான அப்கிரேட் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது; இது கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவில் காணப்பட்ட அலுமினிய ஃபிரேமில் இருந்து மிகவும் வலுவான டைட்டானியம் ஃபிரேமுக்கு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 200எம்பி மெயின் கேமரா + 12எம்பி சென்சார் + 50எம்பி சென்சார் + 10எம்பி சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப், 12எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒன் யுஐ 6 ஓஎஸ், 45W சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








