டிச.13 க்கு அப்புறம் பலருடைய கையிலும் இந்த Redmi 5ஜி போன் தான் இருக்கும்.. எந்த மாடல்? என்ன விலை?
ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனத்திற்கும், அந்நிறுவனத்தின் பெயர் சொல்லும் பிள்ளையாக ஒரு மாடல் அல்லது ஒரு சீரீஸ் இருக்கும். அப்படியாக ரெட்மி (Redmi) பிராண்ட்டின் பெயரை இந்தியா முழுவதும் பரப்பிவிட்ட பெருமை, ரெட்மி நிறுவனத்தின் நோட் சீரீஸ் (Note Series) ஸ்மார்ட்போன்களை தான் சேரும்.
குறிப்பாக ரெட்மி நோட் 7, ரெட்மி நோட் 8 மாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தன. ஒருகாலத்தில் இந்திய மொபைல் சந்தையில், நோக்கியா நிறுவனத்தின் ஆட்சி நடக்கும்போது, எப்படி எல்லோர் கையிலும் நோக்கியா மொபைல்கள் இருந்ததோ.. அதேபோல பெரும்பாலான இந்தியர்களின் கைகளில் ரெட்மி நோட் சீரிஸ் மாடல்கள் தவழ்ந்தன.

பின்னர் ஒப்போ, விவோ, குறிப்பாக ரியல்மி ஆகிய நிறுவனங்கள் ரெட்மி நோட் சீரிஸிற்கு போட்டியாக பல மாடல்களை அறிமுகம் செய்ய தொடங்கின. ஆனாலும் கூட இந்தியர்கள் மத்தியில் ரெட்மி நோட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கும் "மவுஸை" குறைக்கவே முடியவில்லை. இதற்கிடையில் ரெட்மி நோட் 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு.. மவுசு இன்னும் எகிறியுள்ளது.
ரெட்மி நோட் 14 சீரீஸ் மீதான ஆபர்கள்: ரெட்மி நோட் 14 சீரிஸின் கீழ் அறிமுகமான 2 மாடல்களுமே டிசம்பர் 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். இந்த மூன்று மாடல்களுமே எம்ஐ.காம் (Mi.com), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கும்.
அறிமுக சலுகைகளை பொறுத்தவரை ஐசிஐசிஐ (ICICI) அல்லது எச்டிஎப்சி (HDFC) பேங்க் கார்டுகளை பயன்படுத்தி ரெட்மி நோட் 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். கூடவே ஷாவ்மீ நிறுவனமானது ரூ.11,000 மதிப்புள்ள ஜியோ நன்மைளையும் வழங்குகிறது. இப்படியாக ரெட்மி நோட் 14 சீரீஸை வாங்குபவர்கள் மூலம் உங்களால் பெரும் தொகையை சேமிக்க முடியும்.
வெண்ணிலா வேரியண்ட் ஆன ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்ககளை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட், 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5110mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.
ப்ரோ வேரியண்ட் ஆன ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2ப்ரொடெக்ஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளே, மீடியாடெக் டைமென்சிட்டி 70300 அல்ட்ரா சிப்செட், 50எம்பி ரியர் கேமரா, 20எம்பி செல்பீ, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ப்ரோ பிளஸ் வேரியண்ட் ஆன ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட், 50எம்பி ஷாவ்மீ கஸ்டம் சூப்பர் சென்சார் பிளாக்ஷிப் லைட் ஹண்டர் 800 உடனான ட்ரிபிள் ரியர் கேமரா, 20எம்பி செல்பீ, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6200mAh பேட்டரியை கொண்டுள்ளது
சமீபத்தில் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட், 50 மெகாபிக்சல் ரியர் கேமரா, 5160mAh பேட்டரி, ஷாவ்மீ நிறுவனத்தின் ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின் உடனான ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இது அமேசான் வழியாக ரூ.8,498 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications