Home
Mobile

குறைந்த விலை கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

By Super
குறைந்த விலை கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

நிறைய பட்ஜெட் மொபைல்களை வெளியிட்டு இருக்கும் அல்காடெல் நிறுவனம் புதிதாக 3ஜி நெட்வொர்க் வசதி கொண்ட வென்ச்சூர் ஸ்மார்ட்போன் ஒன்றையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது. ஸ்மார்ட்போன் என்றவுடன் அதிக விலை கொண்டதாக இருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம்.

இந்த ஸ்மார்ட்போன் அனைவராலும் எளிதாக வாங்கும் வகையில் இருக்கும் விலை கொண்ட ஸ்மார்ட்போன். அதிலும் சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் ஸ்மார்ட்போன். 2.8 இஞ்ச் திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு 2.3.5 ஜின்ஜெர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இந்த இயங்குதளம் சிறப்பாக இயங்க கியூவல்காம் எம்எஸ்எம்-7627 600 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

அழகான புகைப்படத்தினை எடுக்க இதில் 1600 X 1200 பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும் கேமராவும் உள்ளது. அற்புதமான வீடியோ, ஜியோ டேகிங், ஆப்ஷனல் சூம் போன்ற சிறப்புகளையும் இந்த கேமராவின் மூலம் பெறலாம். எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் வசதியை 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

3ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போனில் 1,300 எம்ஏஎச் லித்தியம் அயான் ரிமூவபுல் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 4 மணி நேரம் டாக் டைம் மற்றும் 12.5 ஸ்டான்-பை டைமினையும் வழங்கும்.

வைபை தொழில் நுட்பத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் டச் மற்றும் டைப் வசதியை கொண்டுள்ளது. இதனால் தொடுதிரை வசதியோடு சேர்த்து, டைப் செய்யும் வசதியையும் சேர்த்து பெறலாம். மல்டிபில் லேங்குவேஜ் வசதியையும் கொடுக்கும் இந்த அல்காடெல் வென்ச்சூர் ஸ்மார்ட்போன் ரூ.5,000 விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X