Home
Mobile

புதிய Alcatel 5ஜி போன்கள் அறிமுகம்.. 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?

அல்காடெல் நிறுவனம் இன்று இந்தியாவில் அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி (Alcatel V3 Ultra 5G) அல்காடெல் வி3 ப்ரோ 5ஜி (Alcatel V3 Pro 5G) மற்றும் அல்காடெல் வி3 கிளாசிக் 5ஜி (Alcatel V3 Classic 5G) ஆகிய மூன்று போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Alcatel V3 Ultra 5G specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2460 x 1080 பிக்சல்ஸ், 650 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த அல்காடெல் போன்.

புதிய Alcatel 5ஜி போன்கள் அறிமுகம்.. 108எம்பி கேமரா.. எந்த மாடல்?

குறிப்பாக ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் உடன் அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 13 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு மூன்று ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கடைக்கும்.3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இந்த அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி போனில் உள்ளன. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 32எம்பி செல்பி கேமரா, 5010எம்ஏஎச் பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி போனில் உள்ளன.

அல்காடெல் வி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Alcatel V3 Pro 5G specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் அல்காடெல் வி3 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 570 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் உடன் அல்காடெல் வி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) ஆதரவும் இந்த போனில் உள்ளன.

50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது அல்காடெல் வி3 ப்ரோ 5ஜி போன். 8எம்பி செல்பி கேமரா, 5200எம்ஏஎச் பேட்டரி, 18W சார்ஜிங், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, க்யூஇசட்எஸ்எஸ், யூஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி, ஐபி54 ரேட்டிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அல்காடெல் வி3 கிளாசிக் 5ஜி அம்சங்கள் (Alcatel V3 Classic 5G specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் அல்காடெல் வி3 கிளாசிக் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 480 நிட்ஸ் பிரைட்னஸ், 720 x 1600 பிக்சல்ஸ், 2.5 கிளாஸ, 480 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் உடன் அல்காடெல் வி3 கிளாசிக் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 3 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். பின்பு ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் வருகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) வசதியும் இந்த போனில் உள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 0.08எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமராக்கள் அல்காடெல் வி3 கிளாசிக் 5ஜி போனில் உள்ளன. மேலும் 8எம்பி செல்பி கேமரா, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 5200எம்ஏஎச் பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபி54 ரேட்டிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த இந்த போனில் உள்ளன.

புதிய Alcatel 5ஜி போன்கள் அறிமுகம்.. 108எம்பி கேமரா.. எந்த மாடல்?

விலை
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.21,999-ஆக உள்ளது. ஹைப்பர் ப்ளூ, ஷாம்பெயின் கோல்ட் மற்றும் ஓஷன் கிரே நிறங்களில் அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி போனை வாங்க முடியும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட அல்காடெல் வி3 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. Matcha க்ரீன், மெட்டாலிக் கிரே நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட அல்காடெல் வி3 கிளாசிக் 5ஜி போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஹாலோ ஒயிட் மற்றும் காஸ்மிக் கிரே நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

அதேபோல் இந்த புதிய மூன்று அல்காடெல் போன்கள் வரும் ஜூன் 2-ம் தேதி மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Alcatel V3 Ultra 5G, V3 Pro 5G and V3 Classic 5G launched in India: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X