மே 27 உறுதி.. 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் Alcatel 5ஜி போன்.. எந்த மாடல்?
அல்காடெல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி (Alcatel V3 Ultra 5G) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் மே 27-ம் தேதி அறிமுகமாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் இந்த புதிய போனை வாங்க முடியும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த புதிய அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Alcatel V3 Ultra 5G Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், லோவ் ப்ளூ லைட் டெக்னாலஜி (low blue light technology), ஆன்டி-கிளார் கோட்டிங் (Anti-glare coating) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ராடு வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன். ஆனால் இந்த போனின் செல்பி கேமரா விவரங்களை வெளியிடவில்லை அந்நிறுவனம். ஆனாலும் 16எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி வசதியுடன் அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் இந்த போனில் உள்ளது.
5010mAh பேட்டரி உடன் அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு ஷாம்பெயின் கோல்ட் (Champagne Gold), மேட்சா கிரீன் (Matcha Green) மற்றும் ஹைப்பர் ப்ளூ (Hyper Blue) நிறங்களில் இந்த புதிய அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.
டைமன்சிட்டி சிப்செட் உடன் அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், 5ஜி, 4ஜி வோல்ட்இ, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, அல்காடெல் வி3 அல்ட்ரா 5ஜி ஸமார்ட்போன் ரூ.30,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த அல்காடெல் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








