இந்தியா : அட்டகாசமான அல்காடெல் யு5 எச்டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
அல்காடெல் யு5 எச்டி ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
தற்சமயம் அல்காடெல் நிறுவனம் இந்தியாவில் அல்காடெல் யு5 எச்டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் மட்டும் இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்காடெல் யு5 எச்டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.0:
அல்காடெல் யு5 எச்டி பொறுத்தவரை குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த அல்காடெல் யு5 எச்டி ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல்எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் ஷோ, எச்டிஆர், செல்பீ ஆல்பம்,
போன்ற வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை , ப்ளூடூத் , 4ஜி எல்டிஇ,யுஎஸ்பி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2200எம்ஏஎச்:
அல்காடெல் யு5 எச்டி ஸ்மார்ட்போனில் 2200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications