ஆண்ட்ராய்டு நௌவ்கட், முன்பக்க ப்ளாஷ் உடன் அல்காடெல் யூ5 எச்டி.!
மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு அல்காடெல் யூ5 எச்டி வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதாவது கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த எம்டபுள்யூசி நிகழ்வில் அல்காடெல் நிறுவனம் அதன் யூ5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இப்போது அக்கருவியின் அப்கிரேட் சாதனமொன்று அல்காடெல் யூ5 எச்டி ஸ்மார்ட்போன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தின் விலை மற்றும் கிடைக்கும்தன்மை பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இந்த விவரங்கள் வரும் செப்டம்பர் தொடக்கத்தில் நிகழும் ஐஎப்ஏ 2017-ல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்ப்ளே, இயக்க முறைமை
லாவா பிளாக் மற்றும் ப்யூர் வைட் என்ற இரண்டு வண்ண விருப்பங்கள் வரும் அல்காடெல் யூ5 எச்டி ஆனது 5.5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஒரு மீடியா டெக் எம்டி6737 க்வாட் கோர் 1.1ஜிகாஹெர்ட்ஸ் செயலி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிபி ரேம் கொண்டு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயக்க முறைமையில் இயங்குகிறது.

பேட்டரி, சேமிப்பு
4 மணி நேர பேச்சு நேரம் மற்றும் 200 மணி நேர காத்திருப்பு நேரத்தை வழங்குவதற்காக 2200எம்ஏஎச் பேட்டரியையோ அல்காடெல் யூ5 எச்டி ஆதரிக்கிறது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு அல்காடெல் யூ5 எச்டி வருகிறது.

கேமரா, இணைப்பு ஆதரவு
கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ்,ஆட்டோஃபோகஸ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 5 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம், 4ஜி / எல்டிஇ, வைஃபை, மைக்ரோ- யூஎஸ்பி போர்ட், ப்ளூடூத் 4.2 மற்றும் ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு ஆதரவுகளை இக்கருவி வழங்குகிறது.


Click it and Unblock the Notifications