கலக்கல் வடிவமைப்பில் வரும் அல்கேட்டல் மொபைல்!

Posted By: Staff
கலக்கல் வடிவமைப்பில் வரும் அல்கேட்டல் மொபைல்!
அல்ட்ரா மாடல் என்று அனைவரையும் சொல்ல வைக்கும் அளவிற்கு ஒரு மொபைலை உருவாக்கி இருக்கிறது அல்கேட்டல்-லுசென்ட் நிறுவனம். அல்கேட்டல் ஓடி-799 ப்ளே என்ற பெயரில் வரும் இந்த புதிய மொபைல், அல்கேட்டல் நிறுவனத்தின் படைப்பு பட்டியலில் சேர்ந்துள்ளது.

110.6 கிராம் எடை கொண்ட இந்த மொபைல் வைப்ரன்ட் கலர் காம்பினேஷன் கொண்ட ரெட் மற்றும் புளூ நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.4 இஞ்ச் திரை கொண்ட இந்த மொபைல், பார்ப்பவர்களின் கண்களை இன்னும் இரண்டு இஞ்ச் அகல விரிய செய்கிறது.

இதனுடைய கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பு ஃபர்ஸ்ட் க்ளாஸ் என்று சொல்ல வைக்கும். இதன் கியூவர்டி கீப்பேட் மொபைலின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கின்றது. 65,000 நிறங்களுக்கு இந்த மொபைல் சப்போர்ட் செய்யும்.

இதில் 2 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட இந்த மொபைல் 1,600 X 1200 பிக்ஸலில் அதிக துல்லியத்தை வழங்கும். இதன் எக்ஸ்டர்னல் மெமரி வசதியை அதிகப்படுத்தி கொள்ளவும் முடியும். எக்ஸ்டர்னல் மெமரி வசதி கொண்ட இந்த மொபைலில், 70எம்பி வரை இன்டர்னல் வசதியும் உள்ளது.

ஜிபிஆர்எஸ் க்ளாஸ் 12 வெர்ஷன் தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் எட்ஜ் க்ளாஸ் 12 வெர்ஷன் தொழில் நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் அட்வான்ஸ்டு ஏ2டிபி புளூடூத் 2.0 வெர்ஷன் கொண்டது. ஆடியோ, வீடியோ, எப்எம் ரேடியோ போன்ற வசதிகளும் உள்ளது.

அதிகாரப்பூர்வமாக அல்காடெல் ஓடி-799 ப்ளே மொபைலின் விலை அறிவிக்கப்படவில்லை. இந்த மொபைலின் வடிவமைப்பை பார்க்கும்போதே இதன் சிறந்த தொழில் நுட்பம் கொண்ட மொபைல் என்பதை நிச்சயம் புரிந்து கொள்ள முடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்