Home
Mobile

அகன்ற திரையில் அல்காடெல் ஸ்மார்ட்போன்!

By Super

அகன்ற திரையில் அல்காடெல் ஸ்மார்ட்போன்!
அகன்ற திரையில் அல்காடெல் நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வழங்குகிறது. ஒன் டச் ஓடி-995 ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொண்டது. 124 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டதாக இருக்கும்.

இந்த இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1400 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. தகவல்களை ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள இதில் 2 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியும் உள்ளது. இந்த மெமரி வசதியை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

இன்டர்நெட் வசதிகளை பெற இதில் வைபை தொழில் நுட்பமும், தகவல்களை பரிமாறி கொள்ள புளூடூத் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான தொழில் நுட்பங்களை பயன்படுத்த முடியும்.

4.92 மெகா பிக்ஸலை வழங்கும் ரியர் கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சம் 2560 X 1920 பிக்ஸல் கேமரா துல்லியத்தினை கொடுக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 0.31 மெகா பிக்ஸல் செகன்டரி கேமரா வசதியும் உள்ளது.

இதனால் இந்த ஸ்மார்ட்போனில் துல்லியமான புகைப்படத்திற்கும், வீடியோ ரெக்கார்டிங் வசதிக்கும் குறைவே இருக்காது என்று கூறலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள லியான் 1,500 எம்ஏஎச் பேட்டரி சிறப்பாக செயல்படும்.

இதன் பேட்டரி 2ஜி வசதிக்கு 840 நிமிடங்கள் டாக் டைம் வசதியினையும், 420 நிமிடங்கள் 3ஜி வசதிக்கும் துணை புரியும். அதே போல் 2ஜி வசதிக்கு 288 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 3ஜி வசதிக்கு 360 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும். சிறந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் இந்த அல்காடெல் ஒன் டைச் ஓடி-995 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X