ஆன்ட்ராய்டு வசதிகளை கொடுத்து குளிர வைக்கும் புதிய ஸ்மார்ட்போன்!

இது கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. ஓஎஸ் சிறப்பாக இயங்க 600 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரையும் வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் இந்த ஓடி-909-எஸ். அதிக தொழில் நுட்பத்தினை வழங்க இதில் கியூவல்காம் எம்எஸ்எம் 7227 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
2.8 இஞ்ச் டிஎப்டி தொடுதிரை வசதியை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இதில் ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
வைஃபை வசதியினை வழங்கும் இந்த அல்கேட்டல் ஓடி-909 எஸ் ஸ்மார்ட்போன் கியூவர்டி கீப்பேட் வசதியினை கொடுக்கும். 2 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் லெட் ஃபிளாஷ் தொழில் நுட்பமும் உள்ளது. புளூடூத், யூஎஸ்பி வசதியில் இருந்து எல்லாமே சிறந்த தொழில் நுட்பம் கொண்டதாகவே இருக்கிறது.
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications