"அடேங்கப்பா" அம்சங்களுடன் அல்காடெல் ஐடால் 5 (விலை, அம்சங்கள்).!
இது ஒரு 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.
அல்காடெல் ஐடால் 5 ஸ்மார்ட்போன் சமீபத்தில் ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் (FCC) சான்றிதழை பெற்றது என்பதை அறிவோம். தற்போது வெளியாகியுள்ள தகவலின் கீழ் நடைபெறவிருக்கும் ஐசிஏ 2017 நிகழ்வில் அல்காடெல்ஐடால் 5 ஆனது 399 யூரோ அதாவது சுமார் ரூ.30,140/- என்ற விலை நிர்ணயத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தமட்டில், 5.2 அங்குல ஐபிஎஸ் டிஸ்ப்ளே முழு எச்டி (1080 பிக்சல்கள்) உடனான 1.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் எம்டி6735 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

16 மெகாபிக்சல் பின்புற கேமரா
3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் நினைவகம் கொண்டுள்ள இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக சேமிப்பு விரிவாக்க ஆதரவும் வழங்கும். கேமரா துறையை பொறுத்தமட்டில், இது ஒரு 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

800எம்ஏஎச் பேட்டரித்திறன்
ஒரு கைரேகை சென்சார் மற்றும் 2800எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ள இக்கருவி வைஃபை சான்றிதழ் பெற்றுள்ளது மற்றும் முன்னதாக ஜிஎப்எக்ஸ்பெஞ்ச் தரப்படுத்தல் வலைத்தளத்திலும் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

5.5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
சமீபத்தில் அல்காடெல் நிறுவனத்தின் யூ5 ஸ்மார்ட்போனின் அப்கிரேட் சாதனமான அல்காடெல் யூ5 எச்டி ஸ்மார்ட்போன் அறிமுகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தின் விலை மற்றும் கிடைக்கும்தன்மை பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்றாலும் லாவா பிளாக் மற்றும் ப்யூர் வைட் என்ற இரண்டு வண்ண விருப்பங்கள் வெளி வருகிறது மற்றும் அல்காடெல் யூ5 எச்டி ஆனது 5.5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்
ஒரு மீடியா டெக் எம்டி6737 க்வாட் கோர் 1.1ஜிகாஹெர்ட்ஸ் செயலி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிபி ரேம் கொண்டு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயக்க முறைமையில் இயங்குகிறது.

8 ஜிபி உள்ளடக்க சேமிப்பு
4 மணி நேர பேச்சு நேரம் மற்றும் 200 மணி நேர காத்திருப்பு நேரத்தை வழங்குவதற்காக 2200எம்ஏஎச் பேட்டரியையோ அல்காடெல் யூ5 எச்டி ஆதரிக்கிறது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு அல்காடெல் யூ5 எச்டி வருகிறது.

8 மெகாபிக்சல் பின்புற கேமரா
கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ்,ஆட்டோஃபோகஸ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 5 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம், 4ஜி / எல்டிஇ, வைஃபை, மைக்ரோ- யூஎஸ்பி போர்ட், ப்ளூடூத் 4.2 மற்றும் ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு ஆதரவுகளை இக்கருவி வழங்குகிறது.


Click it and Unblock the Notifications