டியூவல் சிம் வசதியுடன் புதிய அல்கேட்டல் மொபைல்போன்

ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜெர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எளிதாக இயங்க 650 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் எந்த வகையான தகவல்களையும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
அப்படி தெரிந்து கொள்ளும் தகவல்களை இதன் 3.2 இஞ்ச் திரை வசதி கொண்டு தெளிவாக பார்க்கலாம். ஏனென்றால் இதில் 480 X 320 பிக்ஸல் திரை துல்லியமும் உள்ளது. இதில் உள்ள 3 மெகா பிக்ஸல் கேமரா, அழகான புகைப்படம் எடுக்க உதவியாக இருக்கும்.
ஜிபிஎஸ் மற்றும் வைபை தொழில் நுட்பம் இதில் மிக சிறந்த முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டியூவல் சிம் வசதி கொண்டது. ஆனால் இதில் உள்ள ஒரு தனித்துவம் என்னவென்றால் இதில் ஒரே ஸ்லாட்டில் இரண்டு சிம்களை பொருத்தலாம்!.
இந்த அல்காடெல் பிளேஸ் ஒடி-918-என் என்ற பதிய ஸ்மார்ட்போன் ரூ.7,000 ஒட்டிய விலையில் பிலிப்பைன்ஸிலும், ஆசிய நாடுகளிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications