4ஜி ஆதரவுடன் அல்காடெல் கோ ப்ளிப் அறிமுகம் (விலை, அம்சங்கள்).!

|

ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக ஒரு புதிய கைபேசிகள் அறிமுகமான வண்ணம் உள்ளன. அவ்வகையான கருவிகளில் இந்த கருவி நிச்சயமாக நமக்கு பிடித்தவண்ணம் இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஒருகாலத்தில் ஒரு தொலைபேசி ஆனது அழைப்புகள் செய்யும் மற்றும் உரைகளை அனுப்பும் ஒரு கருவியாகவே கருதப்பட்டது. அந்த காலகட்டத்தில் ப்ளிப் எனப்படும் மடியும் கருவிகள் மிகவும் பிரபலமானவைகளாகும். பெரும்பாலும் நாம் அனைவருமே ப்ளிப் கருவிகளை பயன்படுத்திய அனுபவத்தினை கொண்டிருப்போம். அதை மீண்டும் நமக்கு வழங்கும் நோக்கத்தில் வெளியாகியுள்ள கருவி தான் - அல்காடெல் கோ ப்ளிப்.!

அடிப்படை தொலைபேசி

அடிப்படை தொலைபேசி

சிலர் இன்னும் அடிப்படை தொலைபேசிகளைப் பயன்படுத்த விரும்புகின்றனர். அவர்களை மனதில் வைத்து டி-மொபைல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புதிய போன் தான் - அல்காடெல் கோ ப்ளிப்.

அளவு மற்றும் காட்சி

அளவு மற்றும் காட்சி

அல்காடெல் கோ ப்ளிப் ஆனது அடிப்படையில் ஒரு சிறிய தொலைபேசி ஆகும். இது 4.13 × 2.09 × 0.67 அங்குல அளவைக் கொண்டது மற்றும் 116 கிராம் எடையைக் கொண்டுள்ளது. காட்சி-வாரியான விவரத்தை பொறுத்தம்மட்டில் இந்த சாதனம் 320 × 240 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 2.8 அங்குல திரை கொண்டு வருகிறது.

4ஜிபி

4ஜிபி

இந்த தொலைபேசி 1.1ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஒரு இரட்டை கோர் குவால்காம் செயலி மூலம் இயக்கப்படுகிறது. 5.2எம்பி ரேம் உடன் 4ஜிபி உள் சேமிப்பு கொண்ட இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விவிவைக்க ஆதரவும் வழங்குகிறது. 482எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள இது 6.5 மணி நேரம் பேச்சு நேரம் மற்றும் 11 நாட்கள் காத்திருப்பு நேரம் வழங்குகிறது.

5எம்பி

5எம்பி

அல்காடெல் கோ ப்ளிப் கருவியானது ஒரு 5எம்பி பின்புற எதிர்கொள்ளும் முதன்மை கேமரா கொண்டுள்ளது. இது தவிர, 4ஜி எல்டிஇ ஆதரவு, வைஃபை, ப்ளூடூத் 3.0, ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூஎஸ்பி போர்ட் ஆகியஇணைப்பு விருப்பங்களும் கொண்டுள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

அல்காடெல் கோ ப்ளிப் கருவியானது 75 அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் ரூ.4,900/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Alcatel GO Flip phone with 4G LTE support launched. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X