Home
Mobile

அல்கேட்டல் ஓடி-890 மற்றும் ஓடி- 891 ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு

By Super
அல்கேட்டல் ஓடி-890 மற்றும் ஓடி- 891 ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு
இந்திய சந்தையில் அல்கேட்டல் மொபைல்போன் நிறுவனம் சிறிது சிறிதாக அங்கீகாரம் பெற்று வருகிறது. இதை தக்கவைக்கும் விதமாக ஏராளமான புதிய மாடல்களை அந்த நிறுவனம் தொடர்ந்து களமிறக்க வருகிறது.

இந்த வரிசையில் அல்கேட்டல் சமீபத்தில் களமிறக்கிய அல்கேட்டல் ஓடி-890 மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஓடி-891 போன்களின் சிறப்பம்சங்களை காணலாம்.

இரண்டும் ஸ்மார்ட்போன் ரகத்தை சேர்ந்ததாக இருந்தாலும், பிரிமியம் மல்டிமீடியா போன்களின் விலையில் கிடைக்கும் என்பது விஷேசம். இரண்டும் 2.8 இஞ்ச் டிஎப்டி தொடுதிரையுடன் 320*240 பிக்செல் துல்லியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடியோ மற்றும் வீடியோ பார்மெட்டுகளை இயக்குவதிலும் ஒன்றுபோல்தான் இருக்கின்றன. 3.5 மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக்கும் உண்டு.

ஓடி-890ல் 3ஜி இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டி இல்லை. ஆனால், ஓடி-891ல் இந்த வசதியை பெற முடியும். இரண்டு போன்களிலும் ஜிபிஆர்எஸ், எட்ஜ், புளூடூத் மற்றும் வை-பை கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளன.

இரண்டு போன்களும் ஆன்ட்ராய்டு எக்ளேயர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன. இது அப்ளிகேஷன்களை எளிதாக இயக்க உதவுகிறது. வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 2 மெகா பிக்செல் கேமரா கொண்டுள்ளன. மேலும், 150 எம்பி இன்டர்னெல் மெமரியுடன், 16 ஜிபி வரை கூடுதல் மெமரியை பெறும் வசதியும் உள்ளது.

அல்கேட்டல் ஓடி-890 ரூ.10,500 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஓடி-891 இன்னும் மார்க்கெட்டுக்கு வராததால், அதன் விலை விபரம் குறித்த தகவல்கள் இல்லை. இரண்டு போன்களிலும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வசதிகள் இருப்பதை மறுக்க இயலாது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X