Home
Mobile

முதல் ஆன்ட்ராய்டு போனை அறிமுகப்படுத்தும் அல்கேட்டல்!

By Super

முதல் ஆன்ட்ராய்டு போனை அறிமுகப்படுத்தும் அல்கேட்டல்!
உலகமே ஸ்மார்ட்போன் மயமாகிவிட்டது என்ற விஷயத்தை மெய்பிக்க இருக்கிறது அல்கேட்டல் நிறுவனம். இந்த முறை புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது அல்கேட்டல் நிறுவனம்.

இது தான் இந்நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன். இது ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் தொழில் நுட்பம் கொண்டதாக மட்டும் அல்லாமல் டியூவல் சிம் வசதிக்கும் சப்போர்ட் செய்யும். இதில் 650 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றி தொழில் நுட்ப வசதிகளின் விவரங்களை பார்க்கலாம். இது 3.2 இஞ்ச் திரை வசதி கொண்டது. இதனால் 320 X 480 மெகா பிக்ஸல் திரை துல்லியத்தையும் பெறலாம்.

தெளிவான புகைப்படத்தையும், வீடியோவையும் இதன் 3 மெகா பிக்ஸல் கேமரா வழங்கும். ஆடியோ, வீடியோ, 3ஜி போன்ற உயர்ந்த ரக தொழில் நுட்பங்களுக்கும் இந்த ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்யும். இந்த புதிய ப்ளேஸ் டியோ ஓடி-918 ஸ்மார்ட்போனில் சிறந்த வசதிகளை பெறலாம்.

ஏராளமான தொழில் நுட்பங்கள் இருந்தால் அதை சிறப்பாக இயக்குவதற்கு முக்கியமாக பேட்டரி வசதி தேவைப்படும். இதில் எல்ஐ-அயான் 1,300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதனால் சிறப்பான டாக் டைமும் மற்றும் ஸ்டான்-பை டைமும் கிடைக்கும்.

வசதிகள் அதிகமாக இருப்பதால் இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை அதிகமாக இருக்கும் என்றும் தோன்றும். ஆனால் இந்த ப்ளேஸ் டியோ ஓடி-918 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000க்குள் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஸ்மார்ட்போனுக்கு இந்த விலை குறைவு தான். குறைந்த விலையில் உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது அல்கேட்டல் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் மாதத்தில் வெளியாகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X