Home
Mobile

ரூ.12,999 மற்றும் ரூ.13,999/க்கு இதை விட வேறென்ன வேணும்.?! நம்பி வாங்கலாம்.!

அல்காடெல் ஏ7, ஏ5 எல்இடி ஸ்மார்ட்போன்கள் ஆகிய இரண்டு கருவிகளுடன் சில சிறப்பான சலுகைகளும் கிடைக்கின்றது.

By Muthuraj

அல்காடெல் நிறுவனம் இந்தியாவில் அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை அல்காடெல் ஏ7 மற்றும் அல்காடெல் ஏ5 எல்இடி என பெயரிடப்பட்டுள்ளன. அல்காடெல் ஏ7 ஆனது ரூ.12,999/- ஆகும். மறுகையில் உள்ள அல்காடெல் ஏ5 எல்இடி ஆனது ரூ.13,999/- என்ற விலைநிர்ணயத்தை பெற்றுள்ளது.

ரூ.12,999 மற்றும் ரூ.13,999/க்கு இதை விட வேறென்ன வேணும்.?!

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் அமேசான் இந்தியாவில் பிரத்தியேகமாக விற்பனைக்கு கிடைக்கும். அல்காடெல் ஏ5 எல்இடி கருப்பு நிறத்தில் வருகிறது, அல்காடெல் ஏ7 ஆனது மெட்டல் பிளாக் மற்றும் மெட்டாலிக் கோல்ட் நிற விருப்பங்களில் வருகிறது. அல்காடெல் ஏ5 எல்இடி முதலில் எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும், அல்காடெல் ஏ7 ஐஎப்ஏ 2017 நிகழ்வில் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில சிறப்பான சலுகைகளும் கிடைக்கின்றது

சில சிறப்பான சலுகைகளும் கிடைக்கின்றது

அல்காடெல் ஏ7, ஏ5 எல்இடி ஸ்மார்ட்போன்கள் ஆகிய இரண்டு கருவிகளுடன் சில சிறப்பான சலுகைகளும் கிடைக்கின்றது. அல்காடெல் ஏ5 எல்இடி கருவியுடன் முற்றிலும் இலவசமாக அல்காடெல் பவர் + பிசி01சி பேக் கவர் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அல்காடெல் ஏ7 வாங்குவோர்களுக்கு இலவச டிசிஎல் மூவ்பேண்ட் கிடைக்கும்.

நவம்பர் 10 முதல் நவம்பர் 13 வரை

நவம்பர் 10 முதல் நவம்பர் 13 வரை

மேலும், இரண்டு ஸ்மார்ட்போன்களுக்குமே நான்கு மாதங்களுக்கு 200ஜிபி அளவிலான டேட்டாவை ஜியோ வழங்குகிறது. மேலும் 90 நாட்களுக்குள்ளான இலவச ஒன்டைம் ஸ்கிரீன் ரீபிளேஸ்மென்ட் சலுகையும் கிடைக்கும். இந்த சலுகைகள் நவம்பர் 10 முதல் நவம்பர் 13 வரை கிடைக்கும்.

அல்காடெல் ஏ5 எல்இடி அம்சங்கள்

அல்காடெல் ஏ5 எல்இடி அம்சங்கள்

அல்காடெல் ஏ5 எல்இடி ஆனது அதன் பின்புற பேனலில் ஒரு எல்இடி கவரோடு வருகிறது. பல்வேறு தொடர்புகள் மற்றும் வேறுபட்ட வகை அறிவிப்புகளுக்கு வேறுபட்ட வண்ண வடிவமைப்புகளை இது வெளிப்படுத்தும். அல்காடெல் ஏ5 எல்இடி ஆனது 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.2 அங்குல எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ

3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்புடன், ஒரு ஆக்டா கோர் மீடியாடெக் எம்டி6753 செயலி மூலம் இயங்குகிறது. உடன் இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக சேமிப்பு விரிவாக்க ஆதரவும் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயக்க முறைமையில் இயங்குகிறது மற்றும் 2800எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

13 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல்

13 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல்

கேமராத்துறையை பொறுத்தமட்டில், எப் / 2.0 துளை மற்றும் டூயல் டோன் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் செல்பீக்களுக்கான ஒரு 5 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. தவிர, ஏ5 எல்இடி ஸ்மார்ட்போன் - 4ஜி வோல்ட், ப்ளூடூத் 4.2, வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது. அளவீட்டில் 146x72x10மிமீ மற்றும் 159 கிராம் எடையுடையது.

அல்காடெல் ஏ7 அம்சங்கள்

அல்காடெல் ஏ7 அம்சங்கள்

அல்காடெல் ஏ7 ஆனது 5.5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கப்படக்கூடிய 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க செழிப்புடன், 1.5ஜிகாஹெர்ட்ஸ் உடனான மீடியா டெக் எம்டி6750டி செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

இந்த சாதனத்தில் மேல் பேனலில் ஒன்று மற்றும் கீழ் பேனலில் ஒன்று என இரண்டு முன் எதிர்கொள்ளும் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆதரவு கொண்ட அல்காடெல் ஏ7 ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், எப் / 2.0 துளை, ஆட்டோ போகஸ் மற்றும் டூயல் டோன் எல்இடி ப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் செல்பீக்களுக்கான 84 டிகிரி கோண லென்ஸ், பிளாஷ் கொண்ட ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

இது 9வி1.67ஏ பாஸ்ட் சார்ஜ் செய்யும் ஆதரவு கொண்ட ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, இது 30 நிமிடங்களில் 37 சதவீதம் வரை சாதனத்தை சார்ஜ் செய்யுமென நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 4ஜி வோல்ட், ப்ளூடூத் 4.2, வைஃபை மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது. அளவீட்டில் 153x77x9மிமீ மற்றும் 163 கிராம் எடையுடையது.

Best Mobiles in India

English summary
Alcatel A7, A5 LED smartphones launched in India, price starts Rs 12,999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X