ரூ.5,000 விலையில் வரும் அல்கேட்டல் ஸ்மார்ட்போன்

|
ரூ.5,000 விலையில் வரும் அல்கேட்டல் ஸ்மார்ட்போன்

மொபைல்களை விற்பனை செய்வதில் மிகவும் கைதேர்ந்த நிறுவனமாக திகழ்கிறது அல்கேட்டல் நிறுவனம். சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுப்பதின் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை மிகவும் திருப்திகரமாக நிறைவேற்றி வருகிறது.

602 என்ற புதிய மொபைலை வெளிட்டுள்ளது அல்கேட்டல் நிறுவனம். இந்த மொபைல் 2.4 இஞ்ச் டிஎப்டி தொடுதிரை தொழில் நுட்பம் கொண்டது.

2, 56, 000 கலர்களுக்கு சப்போர்ட் செய்வதன் மூலமும், இதன் 2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலமும் சிறந்த புகைப்படத்தை கண்கவரும் வகையில் கொடுக்கிறது. இதன் கமரா 1600 X 1200 பிக்ஸல் துல்லியத்தைக் கொடுக்கிறது.

850 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரியின் மூலம் தொடர்ந்து 7 மணி நேரம் டாக் டைம் வசதியினை வழங்குகிறது. இதில் 3.5 ஆடியோ ஜேக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஏ2டிபி புளூடூத் வெர்ஷன் 2.1 மற்றும் யூஎஸ்பி வசதியின் மூலம் பெரும் பயன்பாட்டை அடையலாம். இதனால் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை இதன் யூஎஸ்பி வசதியின் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் வசதியினைக் கொடுக்கின்ற ஏ2டிபி வசதியின் மூலம் தகவல்ளை நொடி பொழுதில் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும்.

இதில் 12 வெர்ஷன் ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. 602 மொபைலில் சோஷியல் நெட்வொர்க் வசதியினையும் பெற முடியும். இதனால் ஃபேஸ்புக் போன்றவைகளை உடனுக்குடன் அப்டேட் செய்து கொள்ளவும் முடியும்.

இதில் 4எம்பி இன்டர்னல் வசதியைக் கொண்டது. அதோடு இதன் மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 8ஜிபி வரை தகவல்களை ஸ்டோர் செய்து கொள்ளவும் முடியும். அல்கேட்டல்-602 மொபைலின் சரியான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதன் விலை ரூ.5,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X