அல்காடெல் 5 எக்ஸ், அல்காடெல் 1வி பிளஸ் அறிமுகம்: எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உள்ளிட்ட அற்புதமான அம்சங்கள்!
அல்காடெல் 5 எக்ஸ் மற்றும் அல்காடெல் 1வி பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் முழு விவரக்குறிப்புகளும் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

அல்காடெல் 5 எக்ஸ் மற்றும் அல்காடெல் 1வி பிளஸ்
அல்காடெல் 5 எக்ஸ் மற்றும் அல்காடெல் 1வி பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அர்ஜென்டினாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் முழு விவரக்குறிப்புகளும் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விலை மற்றும் கிடைக்கும் தன்மைகல் தெரிவிக்கவில்லை.

5000 எம்ஏஎச் பேட்டரி
அல்காடெல் 5 எக்ஸ் 5000 எம்ஏஎச் பேட்டரி, 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே இருக்கிறது. அல்காடெல் 1 வி பிளஸ் 6.22 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 10 ஆதரவு மூலம் இரண்டு ஸ்மார்ட்போன்களும் இயக்கப்படுகின்றன. அல்காடெல் 5எக்ஸ் மற்றும் அல்காடெல் 1 வி பிளஸ் இரண்டு ஸ்மார்ட்போன்களும் அல்காடெலின் அர்ஜின்டினா இணையதளத்தில் பட்டியிலடப்பட்டுள்ளன. அல்காடெல் 5 எக்ஸ் கருப்பு மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அல்காடெல் 1 வி பிளஸ் ஒற்றை கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

அல்காடெல் 5 எக்ஸ் அம்சங்கள்
அல்காடெல் 5 எக்ஸ் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 10 ஆதரவு மூலம் இயக்கப்படுகிறது. இது 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. 4ஜிபி ரேம், 128ஜிபி உள்சேமிப்பு வசதி இதில் இருக்கிறது. மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரி கார்ட் ஸ்லாட் இருக்கிறது.

அல்காடெல் 5 எக்ஸ் கேமரா அம்சங்கள்
அல்காடெல் 5 எக்ஸ் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் 48 மெகாபிக்சல் கேமரா, 5 மெகாபிக்சல் கேமரா, இரட்டை இரண்டு மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. மேலும் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அல்காடெல் 5 எக்ஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இதில் பிரத்யேக கூகுள் அசிஸ்டெண்ட் பட்டன், பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் இருக்கிறது.

அல்காடெல் 1வி பிளஸ் அம்சங்கள்
அல்காடெல் 1வி பிளஸ் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையில் இயங்குகிறது. இதில் 6.22 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஓசி செயலி இருக்கிறது. இதில் 32 ஜிபி உள்சேமிப்புடன் மெமரி விரிவாக்க வசதிக்கு 128 ஜிபி வரை விரிவாக்கக் கூடிய ஸ்லாட் இருக்கிறது.

13 மெகாபிக்சல் பிரதான கேமரா
அல்காடெல் 1வி பிளஸ் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா இருக்கிறது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications