டூயல் செல்பீ கேமராவுடன் அசத்தும் அல்காடெல் 5.!
ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் அல்டகேட் 5 ஸ்மார்ட்போனில் டூயல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் கைரேகை ஸ்கேனர் போன்ற அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
சீன நிறுவனமான டிஎசிஎல் அமெரிக்காவில் அல்காடெல் 5 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த தயார்நிலையில் உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் வேகாஸில் உள்ள நுகர்வோர் எலக்ட்ரானிக் ஷோவில் இந்த மாதம் அல்டகேட் 5 அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 18:9என்ற திரைவிகிதம் கொண்டு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

செல்பீ கேமரா:
ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் அல்டகேட் 5 ஸ்மார்ட்போனில் டூயல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் கைரேகை ஸ்கேனர் போன்ற அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இரட்டை சிம்:
அல்காடெல் 5 ஸ்மார்ட்போன் இரட்டை சிம் ஸ்லாட் ஆதரவு கொண்டு வெளிவரும், அதன்பின்பு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கொண்டுள்ளது இந்த அல்காடெல் சாதனம்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

மீடியாடெக்:
இந்த அல்காடெல் 5 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக மீடியாடெக் எம்டி6750 செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

3000எம்ஏஎச்:
அல்காடெல் 5 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications