டூயல் செல்பீ+ சிங்கிள் ரியர் கேமராவுடன் வித்தியாசமான அல்காடெல் 5.!
எப் / 2.0 துளை மற்றும் 120 டிகிரி அகல லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ் உடன் இணைந்து ஒரு இரட்டை முன்பக்க கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
அல்காடெல் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில் சமீபத்திய வன்பொருளை புகுத்தி ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னிலையான ஒரு இடத்தை கைப்பற்றும் நோக்கத்தின்கீழ் அதன் அல்காடெல் 3சி ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. மறுகையில் அதன் அல்காடெல் 5 மற்றும் அல்காடெல் 3வி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களையும் ஏற்கனவே இந்நிறுவனம் அமேசான் பிரான்ஸ் வலைத்தளத்தில் பட்டியலிட்டுள்ளது.
இப்போது, அல்காடெல் 5 ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்புகள் மற்றும் விலை நிர்ணயம் சார்ந்த தகவல்கள் ஆன்லைனில் வெளிப்பட்டுள்ளது. வின்பியூச்சர் (WinFuture) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன் சுமார் ரூ.17,967/- என்கிற விலை நிர்யணத்தை பெறலாம்.

இரு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்
இது அமேசான் பிரான்ஸ் பட்டியலுடன் ஒற்றுப்போகிறதென்பது குறிப்பிடத்தக்கது. மெட்டல் பிளாக் மற்றும் கோல்ட் ஆகிய இரு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது பெஸல்லெஸ் வடிவமைப்பு மொழியை ஏற்றுக்கொண்டதை வெளிப்படுத்தியுள்ளது.

5.5 அங்குல எச்டி+ புல்வியூ ஐபிஎஸ் டிஸ்ப்ளே
உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள அல்காடெல் 5 ஆனது அதன் பின்பக்கத்தில் ஒரு பிரஷ்டு உலோக பூச்சும் கொண்டுள்ளது. இதர அம்சங்களை பார்த்தால், அல்காடெல் 5 ஆனது 5.5 அங்குல எச்டி+ புல்வியூ ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 1440 x 720 என்கிற அளவிலான பிக்சல்கள் அடர்த்தி மற்றும் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்டுள்ளது.

128 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவு
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன், ஆக்டா-கோர் மீடியாடெக் எம்டி6750 செயலி மூலம் இயக்கப்படுகிறது. உடன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக நினைவகத்தை 128 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவும் கொண்டுள்ளது.

இரட்டை முன்பக்க கேமரா
கேமராத்துறையை பொறுத்தமட்டில், இந்த சாதனம் எப் / 2.0 துளை மற்றும் 120 டிகிரி அகல லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ் உடன் இணைந்து ஒரு இரட்டை முன்பக்க கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

3000எம்ஏஎச் பேட்டரி
பின்பக்கத்தில் எப் / 2.0 துளை மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் கேமரா ஒன்றை கொண்டுள்ளது. பின்புற பலகத்தில் கைரேகை சென்சார் ஒன்றை கொண்டுள்ள அல்காடெல் 5 ஆனது ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. மேலும் இது பாஸ்ட் சார்ஜ் ஆதரவும் கொண்டுள்ளது. இது சமீபத்திய ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ இயக்கமுறைமை கொண்டு இயங்குகிறது.

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்
இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்- சி போர்ட், இரட்டை சிம் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவைகளை உள்ளடக்கியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது, பார்சிலோனாவில் நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2018 நிகழ்வில் அறிமுகமாகலாம். மேலும் பலவகையான ஸ்மார்ட்போன் அறிமுகங்கள் மற்றும் அம்சங்கள் சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications








