Home
Mobile

பிப்ரவரி 24 : அசத்தலான அல்காடெல் 5, 3வி மற்றும் 1எக்ஸ் அறிமுகம்.!

அல்காடெல் 3வி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அல்காடெல் 5, அல்காடெல் 3வி, அல்காடெல் 1எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் பிப்ரவரி 24 எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அல்காடெல் நிறுவனம். மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள். மேலும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு முன்பே இந்த
ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அல்காடெல் ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த மூன்று ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்காடெல் 5:

அல்காடெல் 5:

அல்காடெல் 5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 720 x 1440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆக்டோ-கோர் எம்டி6750 சிப்செட் மற்றும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி
இவற்றுள் அடக்கம்.

அல்காடெல் 5 கேமரா:

அல்காடெல் 5 கேமரா:

அல்காடெல் 5 ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இவற்றுள் டூயல் செல்பீ கேமரா மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்துடன் வெளிவரும்.

அல்காடெல் 3வி:

அல்காடெல் 3வி:

அல்காடெல் 3வி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது,
அதன்பின்பு 18:9என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.

அல்காடெல் 3வி கேமரா:

அல்காடெல் 3வி கேமரா:

அல்காடெல் 3வி ஸ்மார்ட்போனில் 16எம்பி + 2எம்பி டூயல் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 அல்காடெல்  1எக்ஸ்:

அல்காடெல் 1எக்ஸ்:

அல்காடெல் 1எக்ஸ் சாதனம் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் அதன்பின்பு கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
அல்காடெல்  1எக்ஸ் கேமரா:

அல்காடெல் 1எக்ஸ் கேமரா:

அல்காடெல் 1எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஒற்றை ரியர் கேமரா அமைப்பு, மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன்
வெளிவரும். அதன்பின்பு பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Alcatel 5 3V and 1X to be launched on February 24; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X