டூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் அல்காடெல் 3வி.!
இந்த அல்காடெல் 3வி ஸ்மார்ட்போனில் 16எம்பி + 2எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
அல்காடெல் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி இந்த மாதம் நடைபெறும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (எம்டபள்யுசி) 2018 நிகழ்ச்சியில் அதன் அல்காடெல் 3வி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அல்காடெல் 3வி பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
புகழ்பெற்ற ரோலண்ட் குவாண்ட்டின் ட்வீட் படி, இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ, பிளாக் , கோல்ட் வண்ண விருப்பங்கள் கிடைக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்ததை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்காடெல் 3வி :
அல்காடெல் 3வி ஸ்மார்ட்போன் பொதுவாக 6.0-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
அல்காடெல் 3வி ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி8735ஏ செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.


நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த அல்காடெல் 3வி ஸ்மார்ட்போனில் 16எம்பி + 2எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 8011.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
அல்காடெல் 3வி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications