6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அல்காடெல் 3சி(அம்சங்கள்).!
அல்காடெல் 3சி ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி8321 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
அல்காடெல் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி கூடியவிரைவில் அல்காடெல் 3சி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது. மேலும் அல்காடெல் 3 சீரீஸ், அல்காடெல் 3, அல்காடெல் 1 சீரீஸ் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் வெளியிடப்படும்
எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்காடெல் 3சி ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தங்கம், நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் இந்த அட்டகாசமான அல்காடெல் 3சி ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு 15மணி நேரம் பேட்டரி பேக்கப் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த அல்காடெல் 3சி ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

அல்காடெல் 3சி :
அல்காடெல் 3சி ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440 x 720பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு:
அல்காடெல் 3சி ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி8321 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த அல்காடெல் 3சி ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8எம்பி ரியர் கேமரா:
இந்த அல்காடெல் 3சி ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
அல்காடெல் 3சி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்பு 15மணி நேரம் பேட்டரி பேக்கப் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலை:
அல்காடெல் 3சி ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.9.165-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications