6-இன்ச் டிஸ்பிளே & 3000எம்ஏஎச் பேட்டரியுடன் அல்காடெல் 3சி அறிமுகம்.!
அல்காடெல் 3சி ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
டிசிஎல் பிராஜெக்ட் அல்காடெல் சிஇஎஸ் 2018-நிகழ்ச்சியில் அல்காடெல் 1எக்ஸ், அல்காடெல் 3சி மற்றும் அல்காடெல் 5 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த அல்காடெல் 3சி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மெட்டாலிக் பிளாக்இ மெட்டாலிக் ப்ளூஇ மற்றும் மெட்டாலிக் தங்கம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

அல்காடெல் 3சி ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரகள் மற்றும் 15மணி நேரம் பேட்டரி பேக்கப் கொண்டவையாக உள்ளது இந்த அல்காடெல் 3சி ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications