6-இன்ச் டிஸப்ளேவுடன் அசத்தும் அல்காடெல் 3சி(அம்சங்கள்).!
இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
அல்காடெல் நிறுவனம் கூடிய விரைவில் அல்காடெல் 3சி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல் தற்சமயம் இணையத்தில் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அல்காடெல் 3சி ஸ்மார்ட்போன் மாடல்.
மெட்டாலிக் தங்கம், மெட்டாலிக் ப்ளூ, மெட்டாலிக் பிளாக் போன்ற நிறங்களில் இந்த அல்காடெல் 3சி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் அல்காடெல் 3சி ஸ்மார்ட்போன்.

அல்காடெல் 3சி :
அல்காடெல் 3சி ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் ஐபிஎஸ் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்
(1440 ஒ 720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு :
அல்காடெல் 3சி ஸ்மார்ட்போனில் குவாட்கோர் மீடியாடெக் எம்டி8321 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
அல்காடெல் 3சி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
அல்காடெல் 3சி ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.9,165-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications