Home
Mobile

பட்ஜெட் விலையில் அசத்தலான ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளதுஇ அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஆல்காடெல் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் முதல் ஆண்ட்ராய்டு ஓரியோ கோ எடிஷன் ஸ்மார்ட்போன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலம், ரோஸ், தங்கம் போன்ற நிறங்களில் இந்த அசத்தலான ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் அசத்தலான ஆல்காடெல் 1  ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போன் விலை 79 யூரோ, இந்திய விலைமதிப்பில் ரூ.6,125 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்போம்.

ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.0-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 480x960 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போனில் 1.28ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6739 64-பிட் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போன்.

பட்ஜெட் விலையில் அசத்தலான ஆல்காடெல் 1  ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு கூகுள் செயலிகளை மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.

இந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

பட்ஜெட் விலையில் அசத்தலான ஆல்காடெல் 1  ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போனில் 2000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
Alcatel 1 With 5 Inch FullView 18 9 Display Android Go Launched Price Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X