ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) உடன் ஆல்கடெல் 1.!

|

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வரும் ஆல்கடெல் நிறுவனத்தின் அடுத்த வெளியீட்டு பட்டியலில் ஒரு லோ-எண்ட் ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெளியான ஆல்கடெல் 1எக்ஸ் ஸ்மார்ட்போனை விட குறைந்த அளவிலான அம்சங்களை கொண்டுள்ள இந்த ஆல்காடெல் 1 ஆனது ரஷ்யாவில் காணப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) உடன் ஆல்கடெல் 1.!

இந்த ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகமாகும் என்பது பற்றி எந்த வார்த்தையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எந்த பட்ஜெட் பிரிவின் கீழ் வெளியாகும் என்பதிலும் தெளிவு இல்லை. ஆனால் 100 யூரோக்கள் மதிப்பிலான 1எக்ஸ்-ஐ விட மலிவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அந்த மாடலை போலவே, இந்த ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ பதிப்பு) கொண்டு இயங்கும். இதன் மலிவான விலை காரணமாக சாதாரணமான அம்சங்களையே கொண்டிருக்கும். அதாவது 480x960 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்டுள்ள 5-இன்ச் டச் ஸ்க்ரீன், 5 எம்பி பின்புற கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா (ஆட்டோஃபோகஸ் உடன்) மற்றும் 2000 mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டிருக்கும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) உடன் ஆல்கடெல் 1.!

மேலும் இது 1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் கோர்டெக்ஸ்-ஏ53 சிபியூ உடனான மீடியாடெக் MT6739 எஸ்ஓசி கொண்டு இயக்கப்படுகிறது. 1 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 8 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மேலும் விலையை மீறிய சிறப்பு கோ-ஆப்ஸ் தொகுப்புகளை வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, கேட் 4 (150Mbps டவுன் 50Mbps அப்), ஜிபிஎஸ், வைஃபை, ப்ளூடூத், மற்றும் இரட்டை சிம் செயல்பாடு, எல்டிஇ ஆகியவைகளை கொண்டிருக்கும். பரிமாணங்களில் 137.6 x 65.7 x 9.8 மிமீ மற்றும் 134 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இந்த ஆல்கடெல் 1 ஆணையு தங்கம், நீலம் மற்றும் கருப்பு ஆகிய வண்ண மாறுபாடுகளில் வாங்க கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Alcatel 1 revealed with even lower-end specs than the 1x. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X