ஏர்டைமின் மலிவு விலை 3ஜி ஃபோன் டாரிட்: விலை ரூ. 4, 999

Posted By: Staff

ஏர்டைமின் மலிவு விலை 3ஜி ஃபோன் டாரிட்: விலை ரூ. 4, 999
மும்பை: ஏர்டைம் நிறுவனத்தின் புதிய மலிவு விலை 3ஜி ஃபோன் டாரிட்.

இந்திய மொபைல் சந்தையில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் களத்தில் உள்ளன. சில இந்திய மொபைல் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களான நோக்கியா, சாம்சங், எல்ஜி-யுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளன.

அதேபோல் தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வந்த பல நிறுவனங்கள் தற்போது மொபைல் உற்பத்தியில் இறங்கியிருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து அமெரிக்க நிறவனமான ஏர்டைமும் மொபைல் உற்பத்தியில் தீவிரமாக இறங்கியிருக்கின்றது.

ஏர்டைம் முதலில் மொபைல் நிறுவனங்களுக்கு வயர்லெஸ் சேவையை வழங்கி வந்தது. ஆனால் தற்போது மலிவு விலையில் 3ஜி டிவைஸோடு கூடிய டாரிட் என்ற 3ஜி ஃபோனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

ஏர்டைம் 3ஜி ஃபோன் டாரிட் 2.8 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்டது. பார்ப்பதற்கும் ஸ்டைலாக உள்ளது. அதில் குவெர்டி(QWERTY) கீபோர்ட் இருப்பதால் டைப் செய்வது சுலபம்.

ஏர்டைம் 3ஜி ஃபோன் டாரிடின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அதனுடைய மலிவான விலையாகும்.

டாரிடில் 1.3 மெகா பிக்சல் கேமராவுடன் 3ஜிபி ஃபார்மட்டில் வீடியோ ரிக்கார்டிங்கும் உள்ளது. அதில் மிக விரைவான 3ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் வசதியும் உள்ளது.

இந்த மொபைல் 3.5 எம்எம் அளவுள்ள யுனிவர்சல் ஆடியோ ஜாக்குடன் மல்டி ஃபார்மட் மியூசிக் வீடியோ பிளேயர்,எஃப்எம், ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி பிசி ஸின்க் வசதியும் உள்ளது. 4ஜிபி வரை விரிவு படுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி மெமரியை சப்போர்ட் செய்யும் அளவு இன்டர்னல் மெமரி உள்ளது.

ஏர்டைம் 3ஜி ஃபோன் டாரிடின் சிறப்பு அம்சங்கள்:

* 3ஜி

* ஸ்டீரியோ ப்ளூடூத்

* 4ஜிபி மெமரி

* டச் மற்றும் டைப் இன்டர்ஃபேஸ்

* ஜாவா வசதி

இந்த மெபைல் ரூ. 4 ஆயிரத்து 999-க்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot