ஜியோவின் இலவசப்போக்கு ஓவர் ஓவர் : அடுத்த வாரம் முதல் ஏர்டெல் அதிரடி.!

Written By:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வோல்ட்இ சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, தற்போது  வந்துள்ள தகவலின் அடிப்படையில் ஏர்டெல் நிறுவனம் அடுத்த வாரம் முதல் நாடு முழுவதும் வோல்ட்இ சேவைகளை துவங்க திட்டமிட்டுள்ளது.

தற்போது ரிலையன்ஸ் ஜியோ பொறுத்தமட்டில் வோல்ட்இ சேவைகள் மூலம் பல மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் ஏர்டெல் நிறுவனம் வோல்ட்இ சேவைகள் துவங்கி வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கால்அழைப்பு வசதிகளுக்க இந்த வோல்ட்இ சேவை மிகவும் சிறந்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனம் அடுத்த வாரம் முதல் வோல்ட்இ சேவைகளை நாடு முழுவதும் வழங்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.

 வோல்ட்இ :

வோல்ட்இ :

வோல்ட்இ சேவைகள் பொறுத்தவரை கால்அழைப்பு தரம் மிக உயர்வாக இருக்கும்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜியோ நிறுவனம் துவங்கப்பட்டு இலவச வோல்ட்இ அழைப்புகளை வழங்கியது.

முப்பை மற்றும் கொல்கத்தா:

முப்பை மற்றும் கொல்கத்தா:

ஏர்டெல் நிறுவனம் இப்போது அறிமுகப்படுத்தும் இந்த வோல்ட்இ சேவைகள் முதலில் மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களுக்கு வழங்கப்படும், அதற்க்குபின்பு பல்வேறு நகரங்களுக்கு அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஐடியா:

ஐடியா:

கூடிய விரைவில் ஐடியா செல்லுலார் நிறுவனமும் வோல்ட்இ சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதற்க்கான பணிகள் இப்போது தெடர்ந்து நடைபெற்று வருகிறது.

டவுன்லோடு வேகம் :

டவுன்லோடு வேகம் :

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆகஸ்ட் மாதம் டவுண்லோட் வேகம் பொறுத்தவரை தொடரந்து ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது, மேலும் இப்போது குறிப்பிட்டுள்ள அறிக்கையில் ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

 9.266எம்பிபிஎஸ்:

9.266எம்பிபிஎஸ்:

ஏர்டெல் நிறுவனம் டவுன்லோடு வேகத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது, 9.266எம்பிபிஎஸ் டவுன்லோடு வேகம் கொண்டுள்ளது. அதன்பின் இந்நிறுவனத்தின் அப்லோடு வேகம் 4.123எம்பிபிஎஸ் வேகம் கொண்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Airtel set to start VoLTE services from next week Jios free run to end ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot