Home
Mobile

Airtel ரூ.619 மற்றும் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. என்னென்ன நன்மைகள்? எதை தேர்வு செய்வது நல்லது?

ஏர்டெல் (Airtel) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் கூட வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. அதாவது இந்த வாயஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களை ஆனது எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகளை மட்டுமே வழங்கும். ஆனால் டேட்டா நன்மையை வழங்காது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.619 மற்றும் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இதில் எந்த திட்டம் அதிக நன்மைகளை வழங்குகிறது மற்றும் எதை தேர்வு செய்வது நல்லது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Airtel ரூ.619 மற்றும் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. என்னென்ன நன்மைகள்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.619 ப்ரீபெய்ட்திட்டம் (Airtel Rs 619 prepaid plan) ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். எனவே ஏர்டெல் ரூ.619 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.619 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle),
உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.பின்பு இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 649 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இதில் உள்ளன.

Airtel ரூ.619 மற்றும் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. என்னென்ன நன்மைகள்

எது சிறந்தது? அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் விரும்பும் பயனர்கள் ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. அதேபோல் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அழைப்பு நன்மைகள் மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.619 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களும் சிறந்த நன்மைகளை வழங்குகிறது.

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது இந்த ஏர்டெல் நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel's Rs 619 and Rs 649 Plans Advantages: Which is better to choose?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X