ஜியோபோன் திட்டத்தை அப்படியே காப்பி அடித்து ஏர்டெல் பலே திட்டம்.!

|

ஜியோபோன் அறிமுகம் மூலம், ஜியோ நிறுவன இந்திய சந்தைக்குள் ஒரு 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட மொபைலை கொண்டுவரவுள்ளது. இந்த மொபைல் அறிமுகமான பின்னர், சந்தையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 4ஜி மொபைல்களின் விலை புள்ளிகள் மாற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றம் ஜியோவிற்கு நல்லதல்ல என்பது தான் நிதர்சனம், ஏனெனில் இதர நிறுவனங்களும் விலை நிர்ணயத்தை மாற்றினால் ஜியோ நிறுவனம் அதன் சந்தாதாரர்களை இழக்க நேரிடலாம். அதெப்படி என்று கேட்கிறீர்களா.? ஜியோபோன் அறிமுகத்திற்கு பின்னர் இதர கைபேசி தயாரிப்பாளர்கள் தங்கள் விற்பனையில் சரிவை காணலாம். அதனை மனதிற்கொண்டு ஏர்டெல் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டமொன்றை திட்டியுள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளர்களின் இழப்பையும் தடுக்கலாம்

ஏர்டெல் வாடிக்கையாளர்களின் இழப்பையும் தடுக்கலாம்

அதாவது ஜியோபோனின் தாக்கத்தை எதிர்கொள்ள ஏர்டெல் குறிப்பிட்ட 4ஜி மொபைல்களோடு சிறப்பு சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் இழப்பையும் தடுக்கலாம் அதே சமயம் இதர 4ஜி மொபைல் உற்பத்தி சரிவையும் குறைக்கலாம்.

பராமரித்தலில் ஆர்வம் கொண்டுள்ளது

பராமரித்தலில் ஆர்வம் கொண்டுள்ளது

2018-ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு முடிவுகளை அறிவித்த பின்னர், ஏர்டெல் எம்.டி. மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான கோபால் விட்டல், "நாட்டின் மிகப்பெரிய ஆபரேட்டர் போன் உற்பத்தியில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் சரக்குகளை பராமரித்தலில் ஆர்வம் கொண்டுள்ளது. 4ஜி பீச்சர் போன்களை அறிமுகம் செய்வதறகு பதிலாக, 4ஜி அம்ச தொலைபேசி உற்பத்தியாளர்களுடன் கைகோர்த்து, சாதனங்களுக்கான தொகுக்கப்பட்ட திட்டங்களை வழங்க திட்டம் கொண்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

ஒரு விரிவாக்கமாக இருக்கும்

ஒரு விரிவாக்கமாக இருக்கும்

ஏர்டெல் நிறுவனம், மார்ச் 2018-ஆம் ஆண்டில் 4ஜி வோல்ட்சேவைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது; ஜியோ தான் தற்போது நாட்டில் ஒரே வோல்ட் நெட்வொர்க் ஆகும். ஏர்டெல் முன்பே சில ஸ்மார்ட்போட்களுக்கான தொகுக்கப்பட்ட திட்டங்களை வழங்குகிறது என்பதால் இந்த புதிய திட்டம் ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கான ஒரு விரிவாக்கமாக இருக்கும்.

தேவைகள் மற்றும் செலவுகளைப் பொறுத்து

தேவைகள் மற்றும் செலவுகளைப் பொறுத்து

தற்போது, லாவா தான் சந்தையில் 4ஜி அம்சம் போன் கொண்ட ஒரே பிராண்ட் ஆகும். விரைவில், மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ் மற்றும் கார்பன் ஆகிய நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற சிறிய பிராண்டுகள் தேவைகள் மற்றும் செலவுகளைப் பொறுத்து, அத்தகைய கைபேசிகளை உற்பத்தி செய்யலாம்.

சொந்த நெட்வொர்க் உடன்

சொந்த நெட்வொர்க் உடன்

மறுபக்கம் ஜியோ நிறுவனன்ம், ஒரு வருடத்திற்குள் 100 மில்லியன் ஜியோபோன்களை விற்குமென எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் சாதனத்தின் சொந்த நெட்வொர்க் உடன் சாதனம் பூட்டப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலானவை இரட்டை சிம் ஆகும்

பெரும்பாலானவை இரட்டை சிம் ஆகும்

ஏர்டெல் நிறுவனத்தின் தொகுக்கப்பட்ட சலுகைகளில் ஜியோபோன் போன்றே அதே வகையான பிரத்யேக அம்சத்தையும், கைபேசியில் தனது பயன்பாடுகளை கொண்டிருக்கலாம். இருப்பினும், சந்தையில் இடம்பெறும் பீச்சர் போன்களில் பெரும்பாலானவை இரட்டை சிம் ஆகும். அதில் ஒரு சிம் ஸ்லாட்டை ஏர்டெல தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜியோ போன்ற அனைத்து 4ஜி வோல்ட் நெட்வொர்க்குகளிலும் ஏர்டெல் வேலை செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel Plans to Beat the 'Free' Reliance Phone With Bundled Offers. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X