Home
Mobile

இன்ப அதிர்ச்சி : ரூ.1,399/-க்கு ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

வெளியாகியுள்ள ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஜியோ 4ஜி போனை ஒருவழி செய்துவிடும் என்பதுபோல் தான் தெரிகிறது.

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையின் கேள் வெளியான ஜியோ 4ஜி ஸ்மார்ட்போனிற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் பார்தி ஏர்டெல் நிறுவனம், அதன் 4ஜி ஸ்மார்ட்போனை ரூ.1,399/- என்ற மிக மலிவான விலை நிர்ணயப்புள்ளி கொண்டு அறிவித்துள்ளது.

இன்ப அதிர்ச்சி : ரூ.1,399/-க்கு ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

4ஜி சேவையில் ஒரு பிரதான இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள ஏர்டெல் நிறுவனம் 4ஜி ஸ்மார்ட்போன் சார்ந்த விடயத்தில் கவனம் செலுத்துவது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. அதற்கு காரணம் ஜியோ தான் என்பதை நாம் அனைவருமே அறிவோம். போட்டிமுனைப்போடு வெளியாகும் ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் ஜியோ 4ஜி போனை தடமில்லாமல் ஆகுமா என்பதே இங்கு நமக்கும் எழும் முதல் கேள்வி.!

முழு தொடுதிரை

முழு தொடுதிரை

வெளியாகியுள்ள ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஜியோ 4ஜி போனை ஒருவழி செய்துவிடும் என்பதுபோல் தான் தெரிகிறது. குறிப்பாக முழு தொடுதிரை அனுபவத்தையும், இரட்டை சிம் ஸ்லாட்களையும், யூட்யூப், வாட்ஸ்ஆப்மற்றும் பேஸ்புக் போன்ற பிரபலமான பயன்பாடுகளுக்கான அணுகலையும் இக்கருவி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்

ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்

அக்டோபர் 11 (இன்று) வெளியான ஒரு செய்தியில், "மில்லியன் கணக்கான இந்தியர்களின் டிஜிட்டல் விருப்பங்களை நிறைவேற்றும் நோக்கம் கொண்டு பல மலிவான தொகுப்புகளின் கீழ் ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்கள் வெளியாகும்" என்று ஏர்டெல் கூறியுள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

மேலும் ஏர்டெல் கூற்றின் கீழ். இந்த 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது கார்பன் ஏ40 இந்தியன் என்று அழைக்கப்படும் மற்றும் ரூ.1,399/- என்ற விலை நிர்ணயத்தை பெறும், மாதாந்திர ரீசார்ஜ் பேக் கொண்டிருக்கும் என்றும் அறியப்படுகிறது.

ரூ.169/- ரீசார்ஜ் பேக்

ரூ.169/- ரீசார்ஜ் பேக்

அதாவது கருவியுடன் தொகுக்கப்படும் ரூ.169/- ரீசார்ஜ் பேக் ஆனது தரவு மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்கும். குறைந்த அளவிலான எண்ணிக்கையில் கிடைக்கும் இந்த கருவியை வாங்கும் விருப்பம் உள்ளவர்கள் அருகாமையில் உள்ள கார்பன் சில்லறை கடையை அணுகலாம்" என்று ஏர்டெல் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

ரூ.1,500/- ரீபண்ட்

ரூ.1,500/- ரீபண்ட்

வாடிக்கையாளர் இந்த 4ஜி ஸ்மார்ட்போனிற்காக, 36 மாத கால ரூ.169/- என்ற மாதாந்திர ரீசார்ஜ் பேக்குகள் உடன் ரூ.2,899/- செலுத்த வேண்டும் என்றும் ஏர்டெல் கூறியுள்ளது. முதல் 18 மாதங்கள் கழித்து ரூ.500/- என்ற ரீபண்ட் வாடிக்கையாளர்க்ளுக்கு கிடைக்கும். அடுத்த 18 மாதங்கள் கழித்து ரூ.1,000/- ரீபண்ட் கிடைக்கும். ஆக கார்பன் ஏ40 இந்தியன் கருவியின் சந்தை விலை ஏறத்தாழ ரூ.3,499/- என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோர்

கூகுள் ப்ளே ஸ்டோர்

ஒரு முழு தொடுதிரை மற்றும் இரட்டை சிம் ஸ்லாட்டுகளை கொண்டுள்ள இக்கருவி யூட்யூப், பேஸ்புக், வாட்ஸ்ஆப் உட்பட கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள எல்லா பயன்பாடுகளின் மீதான முழுமையான அணுகலையும் வழங்குகிறது. ஒருவேளை கூறப்படும் ரூ.169/- ஏர்டெல் ரீசார்ஜை நிகழ்த்தவில்லை என்றால் என்னவாகும்.?

எந்தவொரு பிரிவின் கீழ் உள்ள ரீசார்ஜ்.!

எந்தவொரு பிரிவின் கீழ் உள்ள ரீசார்ஜ்.!

ஒரு வாடிக்கையாளர் ரூ.169/- என்ற தொகுக்கப்பட்ட திட்டத்தைமட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் தேவைகளுக்கு ஏற்ப, எந்தவொரு பிரிவின் கீழ் உள்ள ரீசார்ஜ்களையும் நிகழ்த்தி கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Offers 4G Smartphone At Rs. 1,399. Details Here. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X