Home
Mobile

வெறும் ரூ.1649/-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: ஜியோபோனிற்கு எதிராக ஏர்டெல் அதிரடி.!

இது 2ஜி சந்தாதாரர்கள் அவர்களுக்கான நுழைவுநிலை 4ஜி ஸ்மார்ட்போன்களை தேர்ந்தெடுப்பதை ஊக்குவிப்பதற்கான ஒரு மூலோபாய ஒப்பந்தமாகும்.

By Muthuraj

நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து 'கூட்டு ஒப்பந்தம்' ஒன்றை அறிவித்துள்ளது. இது 2ஜி சந்தாதாரர்கள் அவர்களுக்கான நுழைவுநிலை 4ஜி ஸ்மார்ட்போன்களை தேர்ந்தெடுப்பதை ஊக்குவிப்பதற்கான ஒரு மூலோபாய ஒப்பந்தமாகும்.

வெறும் ரூ.1649/-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: ஏர்டெல் அதிரடி.!

இதன் அடிப்படையில் பார்தி ஏர்டெல் நிறுவனம், உள்நாட்டு கைபேசி உற்பத்தியாளருடன் இணைந்து பணியாற்றும். ஜியோபோன் அறிவிக்கப்பட்ட பின்னர் ஏர்டெல் நிறுவனம் நிகழ்த்தும் மூன்றாவது கூட்டணி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் ஏற்கனவே கார்பன் மற்றும் செல்கான் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, அதன் நுழைவு நிலை 4ஜி ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.1,399/-க்கும் மற்றும் ரூ.1,349/-க்கும் அறிமுகப்படுத்தியது.

அக்வா லயன்ஸ் என்1

அக்வா லயன்ஸ் என்1

அதனைத்தொடர்ந்து தற்போது, இன்டெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அக்வா லயன்ஸ் என்1 என்கிற கருவியை, ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,749/-க்கு அறிவித்துள்ளது. இக்கருவியின் சந்தை விலையான ரூ.3,799/- உடன் க்கு ஒப்பிடும்போது இது மிகவும் மலிவானதாகவும்.

128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு

128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு

டூயல் சிம் ஆதரவு கொண்ட 4ஜி ஸ்மார்ட்போன் ஆன அக்வா லயன்ஸ் என்1, எம்டிகே சிப் மூலம் இயங்குகிறது. 4 அங்குல முழு டச் டபுள்யூவிஜிஏ திரை, 2 மெகாபிக்சல் பின்புறம் மற்றும் முன்பக்க விஜிஏ கேமரா, 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள் சேமிப்பு, 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் கொண்டுள்ளது.

ரூ.1,500/- என்கிற கேஷ்பேக் சலுகை

ரூ.1,500/- என்கிற கேஷ்பேக் சலுகை

இக்கருவியை வாங்குவதில் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.1,500/- என்கிற கேஷ்பேக் சலுகையையும் பெறலாம். அந்த பணத்தை திரும்பப் பெறுவதற்கு, அக்வா லயன்ஸ் என்1 கருவிக்காக ரூ.3,149/- என்கிற முன்பணம் செலுத்துவது அவசியம். இந்த ஸ்மார்ட்போனுடன் ரூ.169/- என்கிற ஏர்டெல் நிறுவனத்தின் மாதாந்திர ரீசார்ஜ் தொகுக்கப்பட்டுருக்கும்.

ரூ.169/- என்கிற ரீசார்ஜ்

ரூ.169/- என்கிற ரீசார்ஜ்

வாடிக்கையாளர், பார்தி ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து ரூ.169/- என்கிற ரீசார்ஜ் திட்டத்தை, தொடர்ச்சியான முறையில் மொத்தம் 36 மாதங்கள் நிகழ்த்த வேண்டும். 18 மாதங்களுக்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு, ரூ.500/- கேஷ்பேக் கிடைக்கும். மேலும் 36 மாதங்கள் முடிந்தபின் மீதமுள்ள ரூ.1,000/- கேஷ்பேக்கை பெறுவார்கள்.

இன்டெக்ஸ் அக்வா ஏ4

இன்டெக்ஸ் அக்வா ஏ4

இந்த கூட்டணி மேலும் இரண்டு 4ஜி ஸ்மார்ட்போன்களையும் விற்பனை செய்கிறது. முதலாவதாக - இன்டெக்ஸ் அக்வா ஏ4 ஆனது ரூ.1,999/- என்கிற விலைப்புள்ளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் சந்தை விலை ரூ.4,999/- ஆகுமென்பது குறிப்பிடத்தக்கது.

1 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி விரிவாக்கம்

1 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி விரிவாக்கம்

இது 1.3 ஜிகாஹெர்ஸ் க்வாட் கோர் ப்ராஸசர், 1 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொடுள்ளது. இது பின்புறத்தில் 5எம்பி முதன்மை கேமரா மற்றும் 2எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

இன்டெக்ஸ் அக்வா எஸ்3

இன்டெக்ஸ் அக்வா எஸ்3

மற்றொரு சாதனமான இன்டெக்ஸ் அக்வா எஸ்3 ஆனது ரூ.4,379/-க்கு கிடைக்கிறது. இதன் சந்தை விளையான ரூ.6,499/- உடன் ஒப்பிடும்போது இதுவொரு சிறந்த விலைப்புள்ளியாகும். இது ஒரு 5 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே, 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்- செயலி மூலம் இயக்கப்படுகிறது.

8எம்பி மற்றும் 5எம்பி

8எம்பி மற்றும் 5எம்பி

இன்டெக்ஸ் அக்வா எஸ்3 ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தை பொறுத்தமட்டில், இது 2 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ளது. இது ஒரு 2450எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. ஒரு 8எம்பி முதன்மை கேமரா மற்றும் ஒரு 5எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

மைஏர்டெல், ஏர்டெல் டிவி மற்றும் வின்க் மியூசிக்

மைஏர்டெல், ஏர்டெல் டிவி மற்றும் வின்க் மியூசிக்

இந்த சாதனங்கள் மைஏர்டெல், ஏர்டெல் டிவி மற்றும் வின்க் மியூசிக் ஆகியவைகளை ப்ரீ-லோடட் பயன்பாடுகளாக கொண்டு வரும். ஒருவேளை, ஏர்டெல் வாடிக்கையாளர் ரூ.169/- என்கிற தொகுக்கப்பட்ட திட்டத்தைத் தேர்வு செய்ய விரும்பவில்லை என்றால், தனிப்பட்ட தேவைக்கேற்ப எந்தவொரு திட்டத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel to offer affordable 4G smartphone priced at just Rs 1649. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X