ஏர்டெல் வோல்ட் சேவை : இன்று முதல் இந்தியாவில்.!
மோட்டோரோலா, சியோமி, சாம்சங் மற்றும் ஓப்போ போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே சோதனைப் பதிப்பை ஏர்டெல் நிறுவனம் துவக்கியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் இன்று அதன் பிரதான அறிவிப்பை இன்று வெளியிடுகின்றது. அதாவது வெளியான சில அறிக்கையின்படி, ஏர்டெல் நிறுவனம் நாட்டில் தனது வோல்ட் (VoLTE) சேவைகளை இன்று அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
"ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, ஆப்பிள் இந்தியாவின் ஆதரவுப் பக்கத்தில் ஏர்டெல் ஏற்கனவே நாட்டில் வோல்ட் சேவையை ஆதரிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது" என்று டெலிகாம் டால்க் தெரிவித்துள்ளது.

உண்மையில், ஏர்டெல் நிறுவனம் அதன் அதன் 4ஜி தொலைப்பேசி பயனர்களுக்கு வோல்ட் ஆதரவை வழங்குவதில் பணியாற்றி வருகிறது. மேலும் அது பல ஹேண்ட்செட் பிளேயர்களுடன் பேச்சுவார்த்தைகளில் உள்ளது மற்றும் மோட்டோரோலா, சியோமி, சாம்சங் மற்றும் ஓப்போ போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே சோதனைப் பதிப்பை நிறுவனம் துவக்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் வோல்ட் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்காக நோக்கியா நிறுவனத்திற்கு ரூ.402 கோடி ஒப்பந்தத்தை வழங்கியது என்பதும் ஏர்டெல் தனது வோல்ட் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான முக்கியமான காரணமாக ஜியோ திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ நாட்டில் எல்டிஇ நெட்வொர்க்குகள் மீது வோல்ட் அல்லது வாய்ஸ் சேவைகளை வழங்குகிறது. இதே சேவைதான் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகளை வழங்குவதற்கான முக்கிய காரணமாகவும் திகழ்கிறது.

வோல்ட் என்பது வாய்ஸ் ஓவர் எல்டிஇ என்பதின் சுருக்கமாகும். அதாவது குரல் அழைப்புகளை எல்டிஇ வழியாக குரல் தரவை அனுப்புவதற்கான ஒரு புதிய நெறிமுறையாகும் மற்றும் வோல்ட்-இன் மிகப்பெரிய நன்மை என்பது 3ஜி அல்லது 2ஜி இணைப்புகளில் கூட உயர் தரத்தை வழங்கும் அதேசமயம் 2ஜி மற்றும் 3ஜி-யில் 4ஜி-யை காட்டிலும் மேற்பட்ட தரவுகளை மாற்றவும் உதவுவதே ஆகும்.


Click it and Unblock the Notifications