Home
Mobile

"என் முதல் ஸ்மார்ட்போன்" திட்டத்தின் கீழ் ரூ.1349/-க்கு ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்.!

ஏர்டெல் தனது முதல் 4ஜி ஸ்மார்ட்போன் ஆன கார்போன் ஏ40 ஸ்மார்ட்போனை கார்போன் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தியது.

By Muthuraj

"என் முதல் ஸ்மார்ட்போன்" என்ற திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் அதன் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. செல்கான் நிறுவனத்துடனான கூட்டணியில் உருவாகியுள்ள இந்த செல்கான் ஸ்மார்ட் 4ஜி ஸ்மார்ட்போனானது ரூ.1349/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு, ஏர்டெல் தனது முதல் 4ஜி ஸ்மார்ட்போன் ஆன கார்போன் ஏ40 ஸ்மார்ட்போனை கார்போன் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தியது.

ரூ.1349/- என்ற விலைக்கு அறிமுகமாகியுள்ளது.!

ரூ.1349/- என்ற விலைக்கு அறிமுகமாகியுள்ளது.!

அதனை தொடர்ந்து வெளியாகியுள்ள செல்கான் ஸ்மார்ட் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1349/- என்ற விலைக்கு அறிமுகமாகியுள்ளது. தற்போதைய சந்தை விலைப்படி ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது சுமார் ரூ.3500/- ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

4 அங்குல தொடுதிரை

4 அங்குல தொடுதிரை

செல்கான் ஸ்மார்ட் 4ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், 4 அங்குல தொடுதிரை டிஸ்பிளே , இரட்டை சிம் ஸ்லாட்கள் மற்றும் எஃப்எம் ரேடியோ ஆகியவைகள் இடம்பெறுகின்றன.

யூட்யூப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்.!

யூட்யூப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்.!

உடன் இக்கருவி ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும். யூட்யூப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் உட்பட கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள அனைத்து பயன்பாடுகளுக்கும் முழு அணுகலை வழங்கும் இந்த சாதனம் மை ஏர்டெல் பயன்பாடு, வின்க் ம்யூசிக் மற்றும் ஏர்டெல் டிவி ஆகிய ப்ரீலோடட் பயன்பாடுகளும் கொண்டு வருகிறது.

32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி  உள்ளடக்க சேமிப்பு.!

32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடக்க சேமிப்பு.!

1500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இக்கருவி 1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் ப்ராசஸர் உடனான 1 ஜிபி ரேம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பும் கொண்டுள்ளது.

ரூ.169/- என்ற மாதாந்திர திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.!

ரூ.169/- என்ற மாதாந்திர திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.!

கேமராத்துறையை பொறுத்தமட்டில், முன்பக்கம் 2எம்பி அளவிலான செல்பீ கேமராவும், பின்பக்கம் 3.2எம்பி அளவிலான ரியர் கேமராவும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.169/- என்ற மாதாந்திர திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும், நாள் ஒன்றிற்கு 0.5ஜிபி தரவுடன் வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வழங்கும்.

Best Mobiles in India

English summary
Airtel announces Celkon Smart 4G smartphone at effective price of Rs 1349. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X