தீபாவளி சர்ப்ரைஸ் : ஆண்ட்ராய்டு நௌவ்கட், 1ஜிபி ரேம் உடன் ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்.!

|

தான் உண்டு, தான் நிர்ணயம் செய்த விலையுண்டு என்று இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் அசைக்க முடியாத ஜாம்பவானாக திகழ்ந்த ஏர்டெல் நிறுவனத்தின் ராஜாங்கத்தை, மலிவு விலை திட்டங்களை வழங்குவதின் மூலம் சரித்து தள்ளியது முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

 தீபாவளி சர்ப்ரைஸ் : ஆண்ட்ராய்டு நௌவ்கட் உடன் ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்

இருப்பினும் இன்று வரை இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம் என்ற பெயரை தக்கவைத்துக்கொள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம் தவறவில்லை. அதற்காக ஜியோ நிறுவனம் என்னவெல்லாம் செய்தாலும் பதிலடிக்காக, போட்டிகாக அதை அப்படியே செய்து விட வேண்டிய "காப்பி கேட்" கட்டாயத்தில் ஏர்டெல் நிறுவனம் உள்ளது.

இலவச அழைப்பு

இலவச அழைப்பு

ஜியோ 1ஜிபி 4ஜி டேட்டா வழங்க ஏர்டெல் நிறுவனமும் அதையே வழங்கியது; ஜியோ வோல்ட் அம்சம் கொண்டு இலவச அழைப்புகளை வழங்க, ஏர்டெல் நிறுவனமும் இந்த வாரத்திற்குள் அதன் வோல்ட் சேவையை அறிமுகம் செய்து இலவச அழைப்புகளை வழங்க தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவு விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்

மலிவு விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்

இதெல்லாம் கூட சரி - தொலைத்தொடர்பு சார்ந்த போட்டிகள் என்று எடுத்துக்கொள்ளலாம். அம்பானியின் ஜியோபோன் அறிமுகத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் அதேபோல மலிவு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் முனைப்பில் உள்ளதை எந்த கணக்கின் கீழ் சேர்த்துக்கொள்வதென்றே புரியவில்லை.

"கவர்ச்சிகரமான" தரவு மற்றும் குரல் திட்டம்

வெளியான நம்பகரமான தகவல்களின்படி, இந்த புதிய மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன்கள் தீபாவளி பண்டிகை தினத்தை சுற்றி அறிமுகமாகலாம் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி இணைப்பு மற்றும் "கவர்ச்சிகரமான" தரவு மற்றும் குரல் திட்டம் ஆகியவைகளும் இந்த சாதனத்தின் இடம்பெறும் என்பதை அறிய முடிகிறது.

4 இன்ச் டிஸ்ப்ளே

4 இன்ச் டிஸ்ப்ளே

ஏர்டெல் நிறுவனம் மோளம் திட்டமிடப்படும் இந்த இரட்டை சிம் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4 இன்ச் டிஸ்ப்ளே, முன் மற்றும் பின்புற கேமராக்கள், வோல்ட் அழைப்பு மற்றும் ஒரு திடமான பேட்டரி வாழ்க்கை ஆகிய பிராதன அம்சங்களை கொண்டிருக்கலாம்.

1ஜிபி ரேம்

1ஜிபி ரேம்

மேலும் ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7 கொண்டும் இயங்கும் இந்த கைபேசி 1ஜிபி அளவிலான ரேம் உடன் வரும் போன்ற விவரங்கள் கிடைக்கப்பெற்றாலும் இந்த தொலைபேசிகள் எப்போது சந்தைக்கு வரும்.? முன்பதிவுக்கு கிடைக்கும் போன்ற விடயங்கள் சார்ந்த வார்த்தைகள் எதுவுமில்லை.

பெரிய திரை ஸ்மார்ட்போன்

பெரிய திரை ஸ்மார்ட்போன்

ஜியோவின் சலுகைகளை எதிர்கொள்ளவும், சந்தையில் தனது நிலைப்பாட்டை தக்கவைத்துக் கொள்ளவும் திட்டமிடும் ஏர்டெல் நிறுவனம் மறுகையில் இந்திய தொலைதொடர்பு நுகர்வோர்களுக்கு ஒரு பெரிய திரை ஸ்மார்ட்போன் (4 இன்ச்) அனுபவத்தை ஒரு மலிவு விலையில் வழங்கும் மூலோபாயத்தையும் கொண்டுள்ளதென்பது வெளிப்படை.

விலை மற்றும் வெளியீடு

விலை மற்றும் வெளியீடு

கூறப்படும் இந்த ​​ஏர்டெல் சாதகமானது ஒரு மலிவான 4ஜி ஸ்மார்ட்போனாக, அதாவது ரூ.2000/- என்ற நிர்ணயப்புள்ளி கொண்டு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel 4G smartphone to be launched next week for Rs 2,000 : Report. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X