Home
Mobile

புதிய ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனுக்கு புக்கிங்கை துவங்கியது ஏர்செல்!

By Super

புதிய ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனுக்கு புக்கிங்கை துவங்கியது ஏர்செல்!
வெளி நாட்டு சந்தைகளில் கலக்கி வரும் புதிய ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனுக்கு ஏர்செல் தொலைதொடர்பு நிறுவனம் நேற்று புக்கிங்கை துவங்கியது. இதைத்தொடர்ந்து, வரும் 25ந் தேதி இந்தியாவில் ஐபோன் 4 எஸ்

ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாட்டு சந்தைகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள புதிய ஐபோன் 4 எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.

அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளில் வாடிக்கையாளர்கள் இந்த போனை 10 மணி நேரம் கால்கடுக்க நின்று வாங்கி சென்றனர்.

அந்தளவுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய வாடிக்கையாளர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் தூண்டியது.

இந்த நிலையில், புதிய ஐபோன் 4எஸ் வரும் 25ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனுக்கான புக்கிங்கை நேற்று ஏர்செல் நிறுவனம் துவங்கியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் இந்தியாவில் அறிமுகமாக உள்ள இந்த புதிய ஐபோனில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய

ஐஓஎஸ்-5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம்

ஏராளமான புதிய தொழில்நுட்ப வசதிகளை பெறமுடியும்.

இந்த மொபைல் 3.5 இஞ்ச் திரையை கொண்டிருக்கும். 140 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போனை கையாள்வது மிக எளிதாக இருக்கும்.

ஆற்றல் வாய்ந்த 8 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்கள், வீடியோ ரெக்கார்டிங், வீடியோ சாட்டிங் போன்ற வசதிகளை பெற முடியும்.

ஐபோன் 4-எஸ் மொபைலில் உள்ள 'சிரி' என்ற புதிய அப்ளிக்கேஷனை பயன்படுத்த மக்கள் மிகுந்த ஆர்வத்துடன்

இருக்கின்றனர்.

இது போல் இன்னும் பல அற்புதமான அப்ளிகேஷன் வசதிகளும் இதில் இருக்கிறது.

வெளிநாட்டு சந்தைகளைப் போல் இந்திய சந்தையிலும் இந்த ஐபோன் 4-எஸ் மொபைல் நிச்சயமாக சிறந்த வரவேற்பை பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X