Home
Mobile

வீட்டுக்கு 4 ஆர்டர் விழுமே.. ரூ.4499 க்கு 90Hz டிஸ்பிளே, 1TB மெமரி, 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி (AI Plus Pulse 4G) ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) வழியாக ஏற்கனவே 2 முறை விற்பனைக்கு வந்து விட்டதை தொடர்ந்து தற்போது மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. சுவாரசியமாக இது ரூ.4499 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

நினைவூட்டுக்கும்வண்ணம் இந்தியாவில் ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.4,999 க்கும், இதே ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.6,999 க்கும் - பிளக்க, ப்ளூ, க்ரீன், பிங்க் மற்றும் பர்பிள் ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

வீட்டுக்கு 4 ஆர்டர் விழுமே.. ரூ.4499 க்கு 90Hz டிஸ்பிளே, 1TB மெமரி!

ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடனான 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை (HD Plus Display) கொண்டுள்ளன.

சிப்செட்டை பொறுத்தவரை ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் டி615 (Unisoc T615) சிப்செட்டால் இயக்கப்படுகிறது. மேலும் இது 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜை ஆதரிக்கிறது மற்றும் நெக்ஸ்ட்குவாண்டமின் நெக்ஸ்ட்க்யூ ஓஎஸ் (NxtQ OS) உடன் வருகிறது

நெக்ஸ்ட்க்யூ ஓஎஸ் ஆனது பயனர்கள் தங்களை பற்றிய தரவுகளை மற்றும் விவரங்களை கண்காணிக்கும் ஆப்களை கண்காணித்து அதுகுறித்த விவரங்களை காண்பிக்கும் நெக்ஸ்ட் ப்ரைவஸி (NxtPrivacy) டாஷ்போர்டையும் கொண்டுள்ளது. இந்த ஓஎஸ் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்டது.

கேமராக்களை பொறுத்தவரை, ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் சென்சார்களை கொண்ட ஏஐ-பேக்டு டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 18W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனுடன் ஏஐ பிளஸ் நோவா 5ஜி (AI Plus Nova 5G) ஸ்மார்ட்போனும் அறிமுகமானது. ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை யுனிசாக் டி8200 (Unisoc T8200) சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது.

இதுவும் 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜை ஆதரிக்கிறது மற்றும் நெக்ஸ்ட்க்யூ ஓஎஸ், நெக்ஸ்ட் பிரைவசி டாஷ்போர்டையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் அனுப்பப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் சென்சார்களை கொண்ட ஏஐ-பேக்டு டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது மற்றும் முன்பக்கத்தில் 5-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது

பேட்டரியை பொறுத்தவரை ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 18W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இதுவும் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
AI Plus Pulse 4G Smartphone Coming Sale Again in Flipkart in Offer Price Check Out Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X