ரூ.5999 க்கு கும்பிட்டு வாங்கலாமே.. 4ஜி, 5000mAh பேட்டரி, 50MP கேமரா, 1TB வரை மெமரி.. எந்த மாடல்?
ரியல்மி இந்தியா நிறுவனத்தில் சிஇஓ ஆக பணியாற்றிய மாதவ் ஷெத், அந்த பதவியில் இருந்து வெளியேறிய பின்னர், கடந்த 2025 ஜூலை மாதத்தில் தனது சொந்த நிறுவனத்தின் கீழ் 2 புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தார்.
அவர் தொடங்கிய நெக்ஸ்ட்குவாண்டம் ஷிஃப்ட் டெக்னாலஜிஸ் (NxtQuantum Shift Technologies) நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன்களாக ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி (AI+ Pulse 4G) மற்றும் ஏஐ பிளஸ் நோவா 5ஜி (AI+ Nova 5G) என்கிற 2 மாடல்கள் "சூப்பர் பட்ஜெட்" விலைப்பிரிவின் கீழ் அறிமுகமானது.

அதிலொரு மாடல் ஆன ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில் (Flipkart Black Friday Sale) தற்போது ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட் வலைதளத்தில் இது குறித்த "மொபைல் ஆபர்ஸ்" பேனரின் படி, ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் எம்ஆர்பி விலையான ரூ.7,999 க்கு பதிலாக ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கும்
சுவாரசியமாக இந்த விலை - பிளாக் (Black), ப்ளூ (Blue), க்ரீன் (Green), பிங்க் (Pink), பர்பிள் (Purple) மற்றும் ஸ்பார்க்கிள் ரெட் (Sparkle Red) ஆகிய 6 கலர்ஆப்ஷன்களிலும் பிரதிபலிக்கிறது. ஆக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு எந்த கலர் ஆப்ஷன் விருப்பமோ அதை ஆபர் விலையில் வாங்கலாம்.
ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது யுனிசாக் டி615 சிப்செட்டால் இயக்கப்படுகிறது.
1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜை ஆதரிக்கும் இந்த ஸ்மார்ட்போன் நெக்ஸ்ட்குவாண்டமின் நெக்ஸ்ட்க்யூ ஓஎஸ் (NxtQ OS) உடன் வருகிறது. நெக்ஸ்ட்க்யூ ஓஎஸ் ஆனது பயனர்கள் தங்களை பற்றிய தரவுகளை மற்றும் விவரங்களை கண்காணிக்கும் ஆப்களை கண்காணித்து அதுகுறித்த விவரங்களை காண்பிக்கும் நெக்ஸ்ட் ப்ரைவஸி (NxtPrivacy) டாஷ்போர்டையும் கொண்டுள்ளது. இந்த ஓஎஸ் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்டது.
கேமராக்களை பொறுத்தவரை, ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ-பேக்டு டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் சென்சார் உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை முன்பக்கத்தில் உள்ள 5-மெகாபிக்சல் செல்பீ கேமரா பூர்த்தி செய்யும்.
பேட்டரியை பொறுத்தவரை ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.
ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்பிளே
- யுனிசாக் டி8200 (Unisoc T8200) சிப்செட்
- 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜிற்கான ஆதரவு
- நெக்ஸ்ட்க்யூ ஓஎஸ்
- நெக்ஸ்ட் பிரைவசி டாஷ்போர்ட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- ஏஐ-பேக்டு டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் சென்சார்
- முன்பக்கத்தில் 5-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 18W சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி
- வைஃபை
- ஜிபிஎஸ்
- ப்ளூடூத்
- 3.5மிமீ ஆடியோ ஜாக்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது? பிளிப்கார்ட்டில் தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








