Home
Mobile

வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.9,499 க்கு 6000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 6GB ரேம்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்கள் போட்டிப்போட்டு கொண்டு ஆர்டர் செய்யும்படியான மட்ட விலைக்கு ஏஐ+ பல்ஸ் 2 (Ai+ Pulse 2) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இப்போது, தள்ளுபடி விலைக்கு கிடைப்பதால், விற்பனை மேலும் சூடுபிடித்துள்ளது. இந்த ஏஐ+ பல்ஸ் 2 (Ai+ Pulse 2) ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 17 சதவீத தள்ளுபடியுடன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.9,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.9,499 விலைக்கு இந்த ஏஐ+ பல்ஸ் 2 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.9,499 க்கு 6000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்!

ஏஐ+ பல்ஸ் 2 அம்சங்கள் (Ai+ Pulse 2 Specifications): மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட்டை இந்த ஏஐ+ பல்ஸ் 2 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் நெக்ஸ்ட்குவாண்டம் ஓஎஸ் ( NxtQuantum OS) கிடைக்கிறது.

450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த மாடலின் விலை ரூ.8,999ஆக இருக்கிறது. மேலும், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமராவை இந்த ஏஐ+ பல்ஸ் 2 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

மேலும், 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட்டை (Dust & Splash Resistant) இந்த ஏஐ+ பல்ஸ் 2 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. பட்ஜெட் மாடல்களில் கிடைக்கும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டு உள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை இந்த ஏஐ+ பல்ஸ் 2 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், இதுவொரு 4ஜி ஸ்மார்ட்போனாக இருப்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கிடைக்கிறது.

வை-பை 802 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) மற்றும் குளோனாஸ் (GLONASS) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை இந்த ஏஐ+ பல்ஸ் 2 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. கிரீன் (Green), ப்ளூ (Blue), பிங்க் (Pink), பர்பிள் (Purple) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி வரவேற்கத்தக்கது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X