Home
Mobile

லட்டு மாதிரி விலை.. ரூ.9,000 போதும்.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாகிய மாடல்களின் விலை உயர்ந்துவரும் நேரத்தில், ரூ.9999 விலைக்கு ஏஐபிளஸ் பல்ஸ் 2 எப்இ (Ai+ Pulse 2 FE) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஏஐபிளஸ் பல்ஸ் 2 எப்இ அம்சங்கள் (Ai+ Pulse 2 FE Specifications): 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஏஐபிளஸ் பல்ஸ் 2 எப்இ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மாலி ஜி52 எம்சி2 ஜிபியு (Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

லட்டு மாதிரி விலை.. ரூ.9,000 போதும்.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்!

மேலும், 263 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மட்டுமல்லாமல், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 (Octa Core Mediatek Helio G81) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஏஐபிளஸ் பல்ஸ் 2 எப்இ ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொண்ட மாடலாக இந்த ஏஐபிளஸ் பல்ஸ் 2 எப்இ ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. நெக்ஸ்ட்கியூ ஓஎஸ் (nxrQ OS) கிடைக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த ஏஐபிளஸ் பல்ஸ் 2 எப்இ ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. ஜி சென்சார் (G Sensor), பிராக்சிமிடி சென்சார் (Proximity Sensor) மற்றும் லைட் சென்சார் (Light Sensor) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) கிடைக்கிறது.

கனெக்டிவிட்டிகளை பார்க்கையில், 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0) மற்றும் வை-பை (Wi-Fi) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (3.5 mm Audio Jack) கொடுக்கப்பட்டு உள்ளது. ப்ளூ (Blue), பிளாக் (Black) மற்றும் பர்பிள் (Purple) கலர்களில் கிடைக்க இருக்கிறது.

மேலும், கிரீன் (Green) கலர் வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது. இந்த ஏஐபிளஸ் பல்ஸ் 2 எப்இ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9,999 ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. வருகிற அக்டோபர் 7ஆம் தேதி முதல் இந்த ஏஐபிளஸ் பல்ஸ் 2 எப்இ ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ரூ.10,000 பட்ஜெட்டில் கொடுக்க முடிகிற பீச்சர்கள் கிடைத்துள்ளதால், விற்பனையில் வரவேற்பு பெறலாம். இந்த மாடலுடன் நோவாடேப் 5ஜி (NovaTab 5G) மற்றும் நோவா லேப்டேப் 5ஜி (Nova LapTab 5G) ஆகிய மாடல்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த மாடல்களும் வருகிற அக்டோபர் 7ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்க இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Ai Plus Pulse 2 FE With 4GB RAM Launched Under Rs 10000 in India Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X