Home
Mobile

ஜூன் 22 குறிச்சாச்சு.. பட்ஜெட்ல Ai+ 5G போன்.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை களமிறக்குவதில் பெரிய போட்டியே இருக்கிறது. இந்த போட்டியால் பக்கா பீச்சர்கள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இதில் புதிய நிறுவனமாக, ஏஐ+ (Ai+) சேர்ந்தது. அடுத்தது புதிய மாடல்களை களமிறக்கி தனியிடம் பிடித்து வருகிறது. இப்போது, நோவா நியோ 2 5ஜி (Nova Neo 2 5G) மாடலை களமிறக்க இருக்கிறது.

வருகிற ஜூன் 22ஆம் தேதியன்று, இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் இந்த மாடல் களமிறங்க இருக்கிறது. ஏஐ+ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், ரூ.10,000 முதல் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள்ளேயே இருக்கின்றன. ஆகவே, இந்த ஏஐ+ நோவா நியோ 2 5ஜி ஸ்மார்ட்போனையும் மலிவான விலைக்கு எதிர்பார்க்கலாம். பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வெளியாக இருக்கிறது.

ஜூன் 22 குறிச்சாச்சு.. பட்ஜெட்ல Ai+ 5G போன்.. SONY கேமரா.. மாடல்?

ஆகவே, மைக்ரோசைட் வழியாக டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. அதேபோல டிசைனும் உறுதியாகிவிட்டது. பட்ஜெட்டில் பிரீமியம் லுக் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு ஏற்ற டிசைனில் இந்த நோவா நியோ 2 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. டூயல் கேமரா சிஸ்டம் உள்ளது.

ஏஐ+ நோவா நியோ 2 5ஜி அம்சங்கள் (Ai+ Nova Neo 2 5G Specifications): சோனி ஐஎம்எக்ஸ்582 (SONY IMX582) சென்சாருடன் 48 எம்பி மெயி்ன் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுத்துள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஏஐ+ நோவா நியோ 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.

6000mAh லித்தியம்-பாலிமர் பேட்டரி கொண்ட மாடலாக இருக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் குறித்த விவரங்கள் கொடுக்கப்படவில்லை. ஆக்டா கோர் 2.4 ஜிஎச்இசட் (Octa Core 2.4 GHz) சிப்செட்டை கொடுக்க இருக்கிறது. யுனிசோக் சிப்செட் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், இது பட்ஜெட் மாடலாக இருக்கிறது. 6.74 இன்ச் டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது.

எச்டி (HD) ரெசொலூஷன் வருகிறது. இதுவொரு வி-நாட்ச் டிஸ்பிளே (V-Notch Display) மாடலாக இருக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஏஐ கீ (AI Key) பீச்சரை இந்த ஏஐ+ நோவா நியோ 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன.

கடந்த ஜூலை மாதத்தில் ஏஐ+ நோவா 5ஜி (Ai+ Nova 5G) ஸ்மார்ட்போன் களமிறங்கியது. ஆக்டா கோர் யுனிசோக் டி6200 (Octa Core Unisoc T8200) சிப்செட்டை கொடுத்தது. 5000mAh பேட்டரி மற்றும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்தது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு நெக்ஸ்ட்குவாண்டம் ஓஎஸ் (NxtQuantum OS) கிடைத்தது. நோவா நியோ 2 மாடலிலும் இதை எதிர்பார்க்கலாம்.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருந்தது. மலிவான விலைக்கு கிடைத்ததால், விற்பனையில் பட்டையை கிளப்பியது. ஆகவே, இந்த ஏஐ+ நோவா நியோ 2 5ஜி ஸ்மார்ட்போனை நிச்சயமாக ரூ.15,000 பட்ஜெட்டைவிட மலிவாக எதிர்பார்க்கலாம். இதுவும் பட்ஜெட்டில் இருப்பதால், விற்பனையில் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Ai Plus Nova Neo 2 5G With 48MP Camera Launching in India on June 22 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X