போட்டிக்கு ரெடியாச்சு.. 4325mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. புது Ai+ போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பிளிப் ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் நிறுவனங்களுக்கு போட்டியாக ஏஐ+ (Ai+) நிறுவனத்தின் ஏஐ+ நோவா பிளிப் 5ஜி (Ai+ Nova Flip 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது, வெளியீட்டு தேதி, சிப்செட், கேமரா, டிஸ்பிளே மற்றும் பேட்டரி உள்ளிட்ட பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. இந்த ஏஐ+ நோவா பிளிப் 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங், மோட்டோரோலா மற்றும் டெக்னோ நிறுவனங்கள் பிளிப் மாடல்களை இந்தியாவில் களமிறக்கி வருகின்றன. இப்போது, ஏஐ+ (Ai+) நிறுவனமும் சேர்ந்துள்ளது. வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி ஏஐ+ நோவா பிளிப் 5ஜி ஸ்மார்ட்போனை களமிறக்க இருக்கிறது. இதே தேதியில் ஏஐ+ நோவா 2 5ஜி (Ai+ Nova 2 5G) மற்றும் ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி (Ai+ Nova Ultra 5G) ஸ்மார்ட்போன்களும் வெளியாக இருக்கின்றன.

மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு ஏஐ+ ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. ஆகவே, இந்த ஏஐ+ நோவா பிளிப் 5ஜி ஸ்மார்ட்போனும் பட்ஜெட் விலையில் வெளியாக வாய்ப்புள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இதே தளத்தில் மைக்ரோசைட் வழியாக சிப்செட், கேமரா, டிஸ்பிளே மற்றும் பேட்டரி உள்ளிட்ட பீச்சர்கள் தெரியவந்துள்ளன.
ஏஐ+ நோவா பிளிப் 5ஜி அம்சங்கள் (Ai+ Nova Flip 5G Specifications): 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியல் கேமரா செட்டப்பை இந்த ஏஐ+ நோவா பிளிப் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 13 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து உள்ளது. 50 எம்பி ஹோவர் போட்டோகிராபி (Hover Photography) சப்போர்ட் கிடைக்கிறது.
4325mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.2 எம்எம் தடிமன் மற்றும் 193 கிராம் எடையை கொடுத்து உள்ளது. ஆகவே, ஸ்லிம் ஸ்மார்ட்போனை விரும்பும் பிரியர்களையும் தட்டித்தூக்கும்படி இருக்கிறது. நெக்ஸ்ட்கியூ ஓஸ் (nxtQ OS) கிடைக்கிறது. 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், 443 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. மேலும், 10 பிட் கலர் டெப்த் மற்றும் 2160Hz PMW டிம்மிங் ஃபிரிகொன்சியை இந்த ஏஐ+ நோவா பிளிப் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dismensity 7300X 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த பீச்சர்கள் மட்டுமே பிளிப்கார்ட் தளத்தில் உறுதி செய்யப்ப்பட்டுள்ளன. மேலும், ஏஐ+ நோவா 2 5ஜி ஸ்மார்ட்போனும் அதே தேதியில் வெளியாக இருக்கிறது. இதில் 50 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 6.74 இன்ச் எச்டிபிளஸ் டிஸ்பிளே கிடைக்கிறது. யுனிசோக் டி8200 சிப்செட்டை கொடுக்க உள்ளது. ஐபி64 ரேட்டிங் கொடுத்து உள்ளது. 6000mAh பேட்டரி உள்ளது.
அதேபோல ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. ஐபி68 ரேட்டிங் கிடைக்கிறது. எம்டிகே டி4200 சிப்செட்டை கொடுத்துள்ளது. 6000mAh பேட்டரி கிடைக்கிறது. மூன்று மாடல்களும் ஏப்ரல் 9ஆம் தேதி வருகின்றன.


Click it and Unblock the Notifications








