Home
Mobile

Flipkart-ல் சரி பாதி விலைக்கு SALE ஆகும் புது Flip போன்.. 5ஜி, 8ஜிபி ரேம், 4325mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி இந்தியா (Realme) நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான மாதவ் ஷெத்தின் சொந்த ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஏஐ பிளஸ் (AI Plus) நிறுவனமானது, கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தது. அதில் ஒரு பிளிப் போனும் அடக்கம். அது ஏஐ பிளஸ் நோவா பிளிப் 5ஜி (AI Plus Nova Flip 5G) ஸ்மார்ட்போனாகும்.

இது ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி (AI Plus Nova 2 5G) மற்றும் ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி (AI Plus Nova 2 Ultra 5G) ஆகிய ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. 2 "நார்மல்" ஸ்மார்ட்போன்களின் விலைகளும் அறிவிக்கப்பட்டு விற்பனைக்கு வந்த பின்னரும் கூட, பிளிப் போனின் விலை மற்றும் விற்பனை அறிவிக்கப்படாமலேயே இருந்தது.

Flipkart-ல் சரி பாதி விலைக்கு SALE ஆகும் புது Flip போன்!

இதற்கிடையில் தற்போது, ஏஐ பிளஸ் நோவா பிளிப் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை ஆனது பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக தொடங்கி. உள்ளது. பிளிப்கார்ட் வலைத்தளத்தின் படி இந்த ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி விலை ரூ.79,999 ஆகும். ஆனாலும் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கும். அதாவது ரூ.40,000 தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

ஏஐ பிளஸ் நோவா பிளிப் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: கிளாம்ஷெல் டிசைனை கொண்டுள்ள ஏஐ பிளஸ் நோவா பிளிப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் அமோஎல்இடி இன்னர் டிஸ்பிளே மற்றும் 3.1-இன்ச் கவர் ஸ்கிரீனையும் கொண்டுள்ளது.

மேலும் இது மீடியாடெக் டைமென்சிட்டி 7300எக்ஸ் சிப்செட் கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 32-மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. கூடவே இது 33W சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4325mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

ஏஐ பிளஸ் நோவா பிளிப் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.9-இன்ச் AMOLED இன்னர் டிஸ்பிளே
- 2790 x 1188 பிக்சல்கள் ரெசல்யூஷன்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 443ppi பிக்சல் டென்சிட்டி
- 1200 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் மோட் ஆதரவு
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்
- 10-பிட் கலர் டெப்த்
- 2160Hz PWM டிம்மிங்
- 3.1-இன்ச் AMOLED கவர் டிஸ்பிளே

- மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட்
- 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி uMCP 2.2 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான NxtQ ஓஎஸ்
- 10x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கும் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- போர்ட்ரெய்ட் ஷாட்களுக்காக 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- இது ஹோவர் மோடில் அல்லது பகுதியளவு மடிக்கப்பட்ட நிலையில் பயன்படுத்தும்போது கூட தெளிவான படங்களை எடுக்கும் என்று கூறப்படுகிறது

- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா - 33W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 4,325mAh பேட்டரி
- PD3.0 மற்றும் PPS ஸ்டாண்டர்ட் ஆதரவு
- டூயல் 5ஜி சிம் ஆதரவு
- ப்ளூடூத், என்எப்சி, ஓடிஜி, எல்1 மற்றும் எல்5 பேண்டுகளுடன் கூடிய ஜிபிஎஸ்
- ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் மடிக்கப்பட்ட நிலையில் 7.2 மிமீ தடிமன்
- எடையில் 193 கிராம்

Best Mobiles in India

English summary
AI Plus Nova Flip 5G Phone Sale Started in Flipkart At Rs 40000 Discounted Price See Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X