சபாஷ்.. சொந்த கம்பெனியின் கீழ் ரூ.4999 க்கு 4G, ரூ.7999 க்கு 5G போன் அறிமுகம் செய்த முன்னாள் ரியல்மி சிஇஓ!
சொன்னபடியே.. ரியல்மி இந்தியாவின் (Realme India) முன்னாள் சிஇஓ-வான மாதவ் ஷெத் (Madhav Sheth) தலைமையிலான நெக்ஸ்ட்குவாண்டம் ஷிஃப்ட் டெக்னாலஜிஸ் (NxtQuantum Shift Technologies) நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன்களாக ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி (AI+ Pulse 4G) மற்றும் ஏஐ பிளஸ் நோவா 5ஜி (AI+ Nova 5G) ஸ்மார்ட்போன்கள் இன்று (ஜூலை 8) இந்தியாவில் அறிமுகமாகின.
இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 15 (Android 15) அடிப்படையிலான நெக்ஸ்ட்குவாண்டம் ஓஎஸ் (NxtQuantum OS) கொண்டு இயங்குகின்றன. இந்த ஓஎஸ் முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்விரு ஏஐ பிளஸ் ஸ்மார்ட்போன்களுமே இந்தியாவில் வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன்களில் இருக்கும் நெக்ஸ்ட்குவாண்டம் ஓஎஸ் ஆனது பயனர்கள் குறித்த தரவுகளை இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகததால் (Ministry of Electronics and Information Technology - MeitY) அங்கீகரிக்கப்பட்ட கூகுள் கிளவுட் சேவையகங்களில் (Google Cloud Servers) சேமிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி, ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.4,999 க்கும், மறுகையில் உள்ள 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.6,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இதேபோல ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,999 க்கும், மறுகையில் உள்ள 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது
ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி, ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை விவரங்கள்: ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூலை 12 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். மறுகையில் உள்ள ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 13 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இரண்டுமே பிளக்க, ப்ளூ, க்ரீன், பிங்க் மற்றும் பர்பிள் கலர்களில் வாங்க கிடைக்கும்.

ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி, ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி, ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஆகியவைகள் முறையே 90ஹெர்ட்ஸ் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளன.
சிப்செட்டை பொறுத்தவரை ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் டி615 (Unisoc T615) சிப்செட்டால் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் டி8200 (Unisoc T8200) சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. இரண்டுமே 1TB வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜை ஆதரிக்கின்றன.
மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் நெக்ஸ்ட்குவாண்டம்-ன் நெக்ஸ்ட்க்யூ ஓஎஸ் (NxtQ OS) உடன் வருகின்றன. இந்த ஓஎஸ் ஆனது பயனர்கள் தங்கள் தரவை கண்காணிக்கும் ஆப்களை எப்படி கண்காணிக்கிறார்கள் என்பதையும் காண்பிக்கும் NxtPrivacy டாஷ்போர்டையும் கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஓஎஸ் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்டது.
கேமராக்களை பொறுத்தவரை, ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி (AI Plus Pulse 4G), ஏஐ பிளஸ் நோவா 5ஜி (AI Plus Nova 5G) ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் சென்சார்களை கொண்ட ஏஐ-பேக்டு டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளன. இரண்டு போன்களிலும் முன்பக்கத்தில் 5-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ஏஐ பிளஸ் பல்ஸ் 4ஜி மற்றும் ஏஐ பிளஸ் நோவா 5ஜி ஆகிய இரண்டுமே 18W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளன. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








