Home
Mobile

ஏப்ரல் 9-ல் சம்பவம் இருக்கு.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது 5ஜி போன்.. எந்த மாடல்?

ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி ( Ai plus Nova 2 Ultra 5G) ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஏப்ரல் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளியாகும். இந்நிலையில் ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி அம்சங்கள் ( Ai plus Nova 2 Ultra 5G Specifications): 6.78-இன்ச் 1.5கே அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஏப்ரல் 9-ல் சம்பவம் இருக்கு.. வருகிறது புது 5ஜி போன்.. எந்த மாடல்?

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் உடன் ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும்.

50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி பேக் பேனலில் சர்குளர் எல்இடி லைட்னிங் கிடைக்கிறது. இதில் கஸ்டமைசபிள் ஸ்மார்ட் அலெர்ட் (Customisable Smart Alerts) செய்து கொள்ள முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6000mAh பேட்டரி உடன் ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஏப்ரல் 9-ல் சம்பவம் இருக்கு.. வருகிறது புது 5ஜி போன்.. எந்த மாடல்?

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் பர்பிள் (Purple), லைட் ப்ளூ (Light Blue), ரெட்/பர்கன்டி (Red/Burgundy), கிரீன் (Green) மற்றும் டார்க் கிரே/பிளாக் (Dark Grey/Black) நிறங்களில் இந்த புதிய போன் வெளியாகும்.

ஆனால் வெளியான தகவலின்படி, ரூ.15,000-க்கு கீழ் ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஏஐ+ நோவா அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ai plus Nova 2 Ultra 5G specifications and price revealed: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X